Tea Stall Fight CCTV | ”2 நிமிடம் late..” டீ மாஸ்டர் மீது தாக்குதல் அட்டூழியம் செய்த தந்தை,மகன்

Continues below advertisement

மாற்றுத்திறனாளிக்கு இரண்டு நிமிடம் டீ கொடுக்க தாமதமானதால் டீக்கடையில் புகுந்து தந்தை மகன் டீ மாஸ்டரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம்  சார்ந்த கார்த்திக் என்பவர் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி டீக்கடை என்ற பெயரில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.  இவருடைய கடையில் பூரிகமாணிமிட்டா  பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் டீக்கடையின் அருகே விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிகாமணி  என்பவர் கிரிகுமரன் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இதனிடையே கடந்த 24ஆம் தேதி சிகாமணியின் மகன் கிரி குமரன்  வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி  டீக்கடைக்குச் சென்று டீ கேட்டுள்ளார். அப்போது இரண்டு நிமிடம் தாமதமானதன் காரணமாக டீ மாஸ்டருக்கும் மாற்றுத்திறனாளிக்கும் இடையே வாய் தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தனது தந்தையிடம் கிரி குமரன் கூறியதன் காரணமாக இருவரும் ஆத்திரமடைந்து டீ கடைக்கு சென்று டீ மாஸ்டரை சாரா மாறியாக மூக்கின் மீது குத்தி உள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில்  தந்தை சிகாமணி மற்றும் அவருடைய மகன் கிரி குமரன் ஆகியவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola