Nitish kumar vs Tejashwi yadav | தேஜஸ்வி vs நிதிஷ் குமார் கருத்துக்கணிப்பில் திடீர் TWIST

Continues below advertisement

தேஜஸ்வி யாதவ் vs நிதிஷ் குமார்...இருவரில் யார் பீகாரின் அடுத்த முதலமைச்சர் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இச்சூழலில் தான் மகாபந்தன் கூட்டணி சார்பில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளரக அறிவிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் 2015 முதல் பீகாரை ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் NDA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறியப்படுகிறார். 

இந்த நிலையில் தான் அடுத்த முதலமைச்சராக வருவதற்கான வாய்ப்பு தேஜஸ்வி யாதவிற்கு இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மாதம் வெளியிடப்பட்ட சி-வோட்டர் கருத்துக் கணிப்பின்படி பீகாரில் முதல்வர் பதவிக்கு தகுதியுடையவர்கள் பட்டியலில் தேஜஸ்வி யாதவ் முதலிடத்தில் இருக்கிறார். இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 35.5% பேர் தேஜஸ்வியை "மிகவும் விருப்பமான முதல்வர் வேட்பாளராக" தேர்வு செய்தனர்.
இரண்டாவது இடத்தில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் 23% வாக்குகளைப் பெற்று இருந்தார். பீகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாருக்கு 16% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதேபோல், Vote Vibe survey-யின்படிஅ பீகார் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் மிகவும் விருப்பமானவராக உள்ளர்.  இந்த மாதம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில், 35% பேர் தேஜஸ்வி யாதவையும், 23.4% பேர் நிதீஷ் குமாரையும், 13.8% பேர் பிரசாந்த் கிஷோரையும் தேர்வு செய்திருக்கின்றனர். முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு ஆதராவன கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola