Madhampatty Rangaraj Wife| ’’உன் சதி திட்டம் எடுபடாதுகணவரை பறிக்க நினைச்சா..’’ஸ்ருதி பதிலடி!
’’ஒரு வெளியாள் உள்ளே நுழைந்து சட்டப்பூர்வ மனைவியை விரட்ட தந்திரம் செய்யும்போது, ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்! உண்மை வெல்லும்’’ என முதல்முறையாக மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஜாய் க்ரிஷில்டா ரங்கராஜ் விவகாரம் குறித்து மவுனம் கலைத்துள்ளார்.
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி கைவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஷில்டா புகார் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது.பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி ஸ்ருதி வழக்கறிஞர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜாய் கிரிஷில்டா ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்த்தாக குற்றம் சாட்டியது பேசுபொருளானது. முதல் மனைவி ஸ்ருதியும் ரங்கராஜ் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
பின்னர் கிரிஷில்டா கமிஷனர் அலுவலகத்தில் ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இதனையடுத்து தான் ஜாய், ரங்கராஜ் தன்னுடன் எடுத்த நெருக்கமாக புகைப்படங்களை வெளியிடுவது, சமூக வலைதளங்களில் அவரை திட்டி பதிவிடுவது என தொடர்ந்து மாதம்பட்டிக்கு நெருக்கடி கொடுத்தார் ஜாய். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாயின் குடைச்சல்களுக்கு செவி சாய்க்கவில்லை. மேலும் தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய்க்கு தடைவிதிக்க நீதிமன்றத்தில் மனு அளித்தார் மாதம்பட்டி. பின்னர் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்காக இருவரையும் மகளிர் ஆணையம் அழைத்திருந்தது. அப்போது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஆஜராகி பரபரப்பை கூட்டினார் ரங்கராஜ்.
இதனையடுத்து இந்த வழக்கின் தொடர் விசாரனை 29 தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரங்கராஜின் மனைவி ஸ்ருதி முதல்முறையாக இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஸ்ருதி,
’’என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். என்னை பற்றி எதுவும் தெரியாமல், நானும் எனது குழந்தைகளும் எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளானோம் என்பது பற்றிய புரிதல் இல்லாமல் பேசிய சிலருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..இந்த விவகாரத்தில் கண்ணியத்துடன் பதிலளிக்க முதிர்ச்சி எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.எந்தவொரு குடும்பமும் சில குடும்ப நபர்களாலும் அல்லது வெளி நபர்களாலும் பல பிரச்சனைகளை சந்திக்கும். நல்வாய்ப்பாக நாங்கள் ஒற்றுமையுடன் அதனை எதிர்கொண்டு கடந்துவிட்டோம். ஒற்றுமையே வலிமை! ஒரு வெளியாள் உள்ளே நுழைந்து சட்டப்பூர்வமான மனைவியை விரட்ட தந்திரம் செய்யும்போது, ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள்! வலிமை, கண்ணியம் மற்றும் மீள்தன்மையுடன் போராடும் அனைத்து சட்டப்பூர்வ மனைவிகளுடன் நான் துணை நிற்கிறேன்!’’ என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.