ராமதாஸ் அன்புமணி மோதல் பின்னணியில் 2 பெண்கள்! போட்டுடைத்த பாமகவினர் | Ramadoss vs Anbumani

Continues below advertisement

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது

தந்தை மற்றும் மகனுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைக்கு, ஸ்ரீகாந்தி மற்றும் குடும்பத்தை சாராத பெண் ஒருவர்தான் காரணம் என நிர்வாகிகள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். 
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய ராமதாஸ் மற்றும் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே, கருத்து மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், பாமக பொதுக்குழு கூட்டத்திலேயே இளைஞரணி தலைவர் நியமிப்பதில் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை வெளியே தெரிய தொடங்கியது. 

அதன் பிறகு இருவரும் சமாதானமானதைப் போன்று தோற்றம் உருவாகியது. இந்த வருடம் ஏப்ரல் மாதம், திடீரென ராமதாஸ் தன்னிச்சையாக அன்புமணியை தலைவர் பதிவிலிருந்து நீக்குவதாகவும், அவரை செயல் தலைவராக நியமித்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு அன்புமணி, வன்னியர் சங்க மாநாட்டை நடத்தி முடித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய, ஆலோசனை கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் புறக்கணித்தனர். இதன் மூலம் பாமகவில் தனக்கான செல்வாக்கை, அன்புமணி நிரூபித்தார். 

இதுகுறித்து பாமக ஆதவாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டது. அதிமுக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைவது உறுதியான நிலையில் “ஏ” கேட்டகிரி தொகுதிகள் அடையாளம் கண்டு கொடுக்கப்பட்டுள்ளன. தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் ராமதாசையும் அழைத்துக்கொண்டு வர சொன்னதாக ராமதாஸ் தரப்பு கிளப்பிவிட்டுள்ளது தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், இனி ஒரு போதும் ஜிகே மணி, அருள் போன்றோரையெல்லாம் வைத்துக்கொண்டு கட்சி நடத்த முடியாது. தற்போது கிடைத்துள்ள சுதந்திரத்தை அன்புமணி இழக்க விரும்ப மாட்டார். 4 சீட்டு குறைவாக வாங்கினாலும் பரவாயில்லை, இணைவுக்கு வாய்ப்பே இல்லை. இணைவு தேவையும் இல்லை என தெரிவித்தனர்.

கட்சியை உடைத்து அன்புமணிக்கு எதிராக இருப்பவர்கள், எல்லோருமே பாமகவின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் என தெரிவித்தனர். தற்போது இணைவு சாத்தியம் இல்லை, 2026 தேர்தலுக்கு பின் ராமதாஸ் அரசியல் ஓய்வு பெறுவார். சிலர் தாங்கள் ஸ்லீப்பர் செல்லாக வேலை செய்யும் திமுகவிற்கு செல்வார்கள், மீதி பேர் எல்லாம் அன்புமணியின் உண்மையான பாமகவிற்கு திரும்புவார்கள் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் ஒரு சிலரிடம் தொடர்பு கொண்டு பேசுகையில், கட்சி இரண்டாக உடைந்ததின் பின்னணியில், ஸ்ரீ காந்தி மற்றும் குடும்பத்தை சாராத மற்றொரு பெண் தான் காரணம் என தெரிவித்தனர். ஆனால் கட்சியில் இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அன்புமணி பக்கம் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola