Dharmapuri Collector : மழையால் இடிந்த வீடு! SPOT-க்கு விரைந்த கலெக்டர் அதிரடி நடவடிக்கை

Continues below advertisement

அரூர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரனம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் நேற்று 
தருமபுரி மாவட்டம் அரூர், தீர்த்தமலை சுற்று வட்டார பகுதிகளில், வரலாறு காணாத அளவில் இரண்டு மணி நேரத்தில் 17 செ.மீ மழை பெய்தால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அரூர் பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல் தீர்த்தமலை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் நுழைந்தும், உயர் மட்ட பாலங்களில் சேதமும் ஏற்பட்டது. தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஸ் மற்றும் எம்பி ஆ.மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் இருந்த தண்ணீர் தேங்கி இடத்தை பார்வையிட்ட ஆட்சியர், உடனடியாக ஜேசிபி இயந்திரம் வரவழைத்து சாலையின் குறுக்கே தற்காலிகமாக கால்வாய் எடுத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாம்பாடி பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதில், தரைப்பாலம் சேதம் அடைந்த இடத்தை ஆட்சியர் ஆர்.சதீஸ் பார்வையிட்டு தரைப்பாளத்திற்கு மேல் ஓரடி உயரத்திற்கு சுவர் அமைக்க அறிவுறுத்தினார். அதேபோல் கொய்யப்பட்டு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து எடுத்து ஆய்வு செய்து உடனடியாக உதவித்தொகை வழங்க ஆட்சியர்  உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.சதீஸ்,


வடகிழக்கு பருவமழையால் தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில் 17.2 சென்டிமீட்டர் மழை 2 மணி நேரத்தில் பொழிந்தது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் எவ்வளவு மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு அரசு அலுவலர்கள் மற்றும் இயந்திரம் தயாராக உள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பில் 200 ஹேக்டர் பரப்பளவில், மழை நீர் தேங்கிய பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு முடிந்த பிறகு உரிய இழப்பீடு வழங்கர்ப்படும்  என தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola