வலுப்பெறுமா MONTHA புயல்! சென்னைக்கு கனமழை ALERT! எங்கே கரையை கடக்கிறது?
வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகும் புயலால் சென்னை கனமழையை சந்திக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பமானதில் இருந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவில்லை. அதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதனை தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த நிலையில் இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது வரும் திங்கட்கிழமை புயலாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த முறை வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி போல் இல்லாமல் இது புயலாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளனர். இந்த புயலுக்கு மொந்தா என பெயர் சூட்டப்படவிருக்கிறது. இந்த பெயருக்கு ‘அழகான மலர்' அல்லது ‘மணம் வீசும் மலர்' என்று அர்த்தம்.
இதன் காரணமாக திங்கட்கிழமை மிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் ததிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை தனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயல் ஆந்திராவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.