Salem Bridge Phone Theft : ’’சிறுமிக்கு ஆபாச MESSAGE’’சேலம் வழிப்பறி சம்பவம் உண்மை பின்னணி!

Continues below advertisement

சேலத்தில் நடந்த சென்ற நபரை மூன்று இளைஞர்கள் தாக்கியதாக வீடியோ வெளியான நிலையில், தாக்குதலுக்கு உள்ளான நபர் சிறுமி ஒருவரை சமூக வலைதளம் மூலம் தொந்தரவு செய்ததும்  அதனாலேயே அவருடைய செல்போனை இளைஞர்கள் பறித்தது தெரியவந்துள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கே ஸ்கூட்டரில் அந்த இளைஞர்கள் அவரை தாக்கி  செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக கூறப்பட்டது.
காயம் அடைந்த அவர் அருகில் உள்ள காவல் நிலையாத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று  இளைஞர்களையும் இன்று கைது செய்தனர்.

இச்சூழலில் தான் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் காவல் துறையில் புகார் அளித்த பிரம்மநாயகம் தான் இன்ஸ்டாகிராமில் பேக் ஐடி ஓபன் செய்து அதன் மூலம் சிறுமிகளுக்கு தவறனா மெஜேஜ்களை அனுப்புவதை வாடிக்கையா வைத்திர்ந்ததும் தெரியவந்துள்ளது.  இந்த விவகாரத்தை அந்த சிறுமி தனது நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். இதனை தொடர்ந்து பிரம்மநாயத்தை சேலத்திற்கு வரவைத்து அவரிடம் இருந்து சம்பந்தப்பட்ட அந்த செல்போனை பறித்தது தெரியவந்துள்ளது என்று சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola