மாங்க்-காக மாறிய கேப்டன் கூல் - இணையத்தில் வைரலாகும் தோனியின் புதிய தோற்றம்.!
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆரம்பகட்டத்தில் தல தோனி என்றாலே, நீண்ட நெடும் தலைமுடி கொண்டவர் என்ற அடையாளம் இருந்துவந்தது. அதன் பிறகு தாடியையும், நீண்ட முடியையும் குறைத்துக்கொண்டு மிடுக்கான ராணுவ வீரரைப்போல தோற்றமளித்தார் தோனி. ஆனால் இப்போது IPL 14 சீசனை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள இந்த நேரத்தில் கேப்டன் கூலின் புதிய தோற்றம் ரசிகர்களை படுகுஷியில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்திய பிரீமியர் லீக் ஆட்டங்களை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தற்போது தோனியின் புதிய தோற்றம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தபிச்சிகளை போல உடையணிந்து மிகவும் சாந்தமாக வெளியாகி உள்ள அந்த புகைப்படத்தின் பின்னல் உள்ள மர்மத்தை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.
அந்த புகைப்படத்தை குறித்து தற்போதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதால், நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய யுகங்களையும், கருத்துக்களை இணையத்தில் குவித்து வருகின்றது. இயல்பாகவே "கேப்டன் கூல்" இவ்வாறு தான் சாந்தமாக பீல்டில் இருப்பார் என்று சிலர் கூறுவதை பார்க்கமுடிகிறது.
இருப்பினும் தோனியின் இந்த புதிய லூக்கின் பின்னால் உள்ள மர்மத்தை அறிய நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் பெருவாரியான பதிலாக உள்ளது.