Nitish kumar | நிதிஷ் CM வேட்பாளர் இல்லையா வச்சுசெய்யும் தேஜஸ்வி யாதவ்! ராகுலின் பக்கா ப்ளான்
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இந்தியா கூட்டணிக்குள் மோதல் இருந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தை சுமுகமாக முடித்து வைத்துள்ளார் மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி. Nda கூட்டணியினர் இதனை நாட்களாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது அப்படியே தலைகீழாக திருப்பி உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நிதிஷ் குமாரை சீண்டியுள்ளது காங்கிரஸ். இதனால் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் புகைச்சல் கிளம்பியுள்ளதாக சொல்கின்றனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்கள் சந்திப்பு
அமித்ஷா மற்றும் அவரது கட்சியினரை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்
எங்கள் கூட்டணி தலைவராக தேஜஸ்வி யாதவை அறிவித்திருக்கிறோம்
உங்கள் கூட்டணியின் தலைவர் யார்?
தலைவர் இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் எடுபடாது
அடுத்த முதலமைச்சராக யார் வருவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்
NDA கூட்டணி தெளிவாக சொல்ல வேண்டும்
இதுதான் எங்கள் கோரிக்கை
ஏன் கேட்கிறோம் தெரியுமா?
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தான் முதலமைச்சராக இருந்தார்
அடுத்த முதலமைச்சரும் அவர்தான் என வாக்கு கொடுத்தார்கள்
ஆனால் தேர்தலுக்கு பிறகு பாஜகவை சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்கினார்கள்
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை சீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்
எங்களுக்கு குழப்பமாக இருக்கிறது
NDA கூட்டணியின் முகம் யார்?
இதுவரை அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை
வாக்குறுதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை
முதலமைச்சர் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை
நிதிஷ் குமார் முதலமைச்சர் ஆகப் போவதில்லை என்பதை அமித்ஷாவின் பேச்சு காட்டுகிறது
தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் சேர்ந்து தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என சொல்கிறார்
நிதிஷ்குமார் முதலமைச்சர் ஆவதை பாஜக விரும்பவில்லை