வலுப்பெறும் மோந்தா புயல் சென்னையை நெருங்குகிறதா?இனி தான் இருக்கு கச்சேரி | Weather Report | Montha Cyclone

Continues below advertisement

வங்கக்கடலில் உருவாகும் மோந்தா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்று அழுத்த தாழ்வு மண்டலம், வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். நாளை காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புயலாகும் உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் கனமழையும், தமிழகத்தில் பலத்த மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாக உள்ள நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நாளை மறுநாள், குறைந்த அளவு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று பரவலாக கனமழைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று புயல் உருவாகும் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிதீவிர கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. புயல் உருவாகும் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு சாலட் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை நாளை அதிதீவிர கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை நாளை ஆரஞ்சு அலெட்‌கொடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola