INDIA Alliance on Exit Poll : EXIT POLL-லாம் சும்மா! புதுதெம்பில் காங்கிரஸ் வெளியான ரிப்போர்ட்
2024 மக்களவை தேர்தல் எக்சிட் போல் கனிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியான போதிலும் ஐஎண்டிஐஏ கூட்டணியினர் மனம் தளராமல் நம்பிக்கையுடன் உள்ளனராம், இதற்கு முக்கிய காரணம் அந்த ரிப்போர்ட் தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அமைத்து வரும் பாஜகவை இந்த முறை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் ஐஎண்டிஐஏ கூட்டணியை அமைத்தது.. நாடே வியந்து பார்க்கும் அளவிற்கு அமைந்த இந்த கூட்டணியில் முதல் விக்கெட்டாக நிதிஷ் வெளியேறினார்.அடுத்ததாக, மிகப்பெரிய விக்கெட்டாக மம்தா கூட்டணியுடன் ஒன்றுபட்டு செயல்படாமல் வலுவிழக்க செய்தார். எனினும் சோர்வடையாத ஐஎண்டிஐ தலைவர்கள் முழுவீச்சுடன் செயல்பட்டனர். பல மீட்டிங்கள், பொதுக்கூட்டங்கள் என இந்தியாவை கைப்பற்ற ராப்பகலாக பிரச்சாரம் செய்தனர்..
இந்நிலையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா யாரிடம் என்பது நாளை தெரிந்துவிடும்.
இம்முறை வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் இருந்த காங்கிரஸிற்கு அதிர்ச்சியூட்டும் வகையில் எக்சிட் போல் முடிவுகள் வெளியானது. பாஜகவுக்கு தான் இந்த முறையும் வெற்றி என்ற முடிவு வெளியானது..
எனினும் காங்கிரஸ் மனம் தளராமல் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி நம்பிக்கையுடன் காத்திருக்கிறது..கருத்து கணிப்புகள் தலைகீழாக மாறும் என காங்கிரஸ் நம்புகிறது..இதற்கு காரனம் காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் சென்ற சில ரிப்போர்ட்கள்தான் தான்..காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் அதாவது கர்நாடகா டிகே சிவக்குமார் தொடங்கி ராஜஸ்தான், தெலுங்கானா, மஹாராஷ்டிரா என்று பல மாநில தலைவர்கள் தங்களது மாநில தொகுதிகளின் நிலவரம் குறித்த ரிப்போர்ட்டை தலைமைக்கு அனுப்பியுள்ளதாம்
இந்த ரிப்போர்ட்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்கள் வரை குறைந்தபட்சம் வெல்லும். மொத்தமாக ஐஎண்டிஐஏ கூட்டணி 295+ இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளதாம். 295க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டிப்பாக இந்தியா கூட்டணி வெல்லும் என்றுதான் தனி ரிப்போர்ட் காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வேயிலும் தெரிய வந்துள்ளதாம். இதனால்தான் எக்சிட் போல் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்..ரிசல்ட் எதிராக வராது.. நமக்கு சாதகமாகவே இருக்கும் என்று காங்கிரஸ் - முழுமனதோடு நம்புகிறதாம். இதன் காரணமாகவே பல புயல்களுக்கு பின்னரும் ஐஎண்டிஐஏ கூட்டணி உடையவில்லை என கூறுகின்றனர். மேலும் மக்களவை தேர்தல் முடிவுகள் வந்த பின் என்ன செய்யலாம்.. என்ன மாதிரியான திட்டங்களை வகுக்கலாம் என்பது பற்றியும் ஐஎண்டிஐஏ கூட்டணி ஆலோசனை செய்யும் முடிவில் உள்ளதாக கூறப்படுகிறது.
![TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/23/7939a9947339ea817eb1722712fc2f571734931725510200_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/16/3834ed453ddff3959c4db5ea8637007d1726466658153200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Vikiravandi By Election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு தற்போதைய நிலவரம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/5f8832d9d75505c2439e1950b90ad13d1720590584863200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/6623baf97db5fb05d0fa94143c88fe881718460524692200_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
![Modi tea meeting : மோடியின் தேநீர் விருந்து! மீண்டும் அமைச்சராகும் L.முருகன்!எம்.பிக்களுக்கு அட்வைஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/09/74568a13c236e2923b0cea977d105b581717928994972572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=100)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)