மேலும் அறிய

BJP Election Results TN : தூக்கி எறியப்பட்ட பாஜக? தமிழ்நாட்டில் மட்டும் ஸ்பெஷல் 234 தொகுதி வாரியான டேட்டா!

இந்தியா முழுவதும் உள்ள 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பாஜக முழுவதுமாக வாஷ் அவுட் ஆகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தோல்வியைத் தழுவி உள்ள நிலையில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 சட்டமன்ற தொகுதிகளில் 1 தொகுதியில் கூட பாஜகவால் வெற்றியை கனியைச் சுவைக்க முடியவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறு சீரமைக்கப்பட்ட பிறகு தற்போது இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மொத்தமுள்ள 36 இடங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் 11 இடங்களில் பாஜக முழுமையாக துடைத்து எறியப்பட்டுள்ளது. 

அதில் தமிழ்நாட்டில் மட்டும் 39 தொகுதிகளிலும் பாஜகவாலோ அதன் கூட்டணிக் கட்சிகளாலோ ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.  திமுக 22 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய 3 கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றிவாகை சூடின. மதிமுக ஓர் இடத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்திலும் என திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிக் கனியைச் சுவைத்தன.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 221 இடங்களை திமுக கைப்பற்றியது. மற்ற 13 இடங்களில் அதிமுக 8 தொகுதிகளிளும் பாமக 3 தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலையில் பாஜகவின் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட, பாஜக போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் முதலிடம் வரவில்லை என்பதே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாஜக கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் எம்.எல்.ஏகள் 4 தொதிகளில் இருந்த போதிலும் 1 ஒரு இடத்தில் கூட  பாஜகவால் வெற்றிப்பெற முடியவில்லை.

இதன் மூலம், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் மூலமாக பாஜக 4 இடங்களை வென்றுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கூட்டணி இல்லையென்றால் ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இருக்க மாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த முறையை விட இந்த முறை அதிமுகவை பல இடங்களில் பின்னுக்கு தள்ளி வாக்கு சதவீதத்தை அதிக படுத்தியுள்ளதாக பாஜக பெருமை பேசி வருகிறது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தல் வாரியாக பார்க்கும் பொழுது தமிழ்நாட்டை பெறுத்தவரைப் பாஜகவின் தாமரை மலரவில்லை என்பதையே உணர்த்துக்கின்றது.

தேர்தல் 2025 வீடியோக்கள்

TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்
TN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
ஓடும் ஆட்டோவில் கத்தி முனையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சென்னையில் அரங்கேறிய கொடூரம்!
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – காவல்துறைக்கு செம டோஸ் விட்ட சென்னை உயர்நீதிமன்றம்  
US Deports Indians: இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா... 205 பேருடன் புறப்பட்ட முதல் விமானம்...
China Vs America: எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
எனக்கே வரி ஏத்துறியா.? இந்தா வாங்கிக்கோ... அமெரிக்க இறக்குமதிக்கு வரியை போட்டுத்தாக்கிய சீனா...
நான் தினமும் வீட்டிலேயே குளிப்பேன்: கும்பமேளா குறித்து முன்னாள் முதலமைச்சர் அளித்த பதில்
நான் தினமும் வீட்டிலேயே குளிப்பேன்: கும்பமேளா குறித்து முன்னாள் முதலமைச்சர் அளித்த பதில்
MTC Driver, Conductor Sacked: சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
சென்னை மாநகரப் பேருந்தில் ஓட்டுநரும், நடத்துநரும் செய்த காரியம்... அவங்க கதி என்ன ஆச்சு தெரியுமா.?
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Thiruparankundram: நெருங்கும் தைப்பூசம்! திருப்பரங்குன்றத்தில் தொடரும் பதற்றம் - வேதனையில் பக்தர்கள்
Viral Video: உப்புமா வேணாம்; பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்! பால்வாடி மழலை வீடியோ வைரல்- அமைச்சர் க்யூட் ரிப்ளை!
உப்புமா வேணாம்; பிரியாணியும் பொரிச்ச கோழியும் வேணும்! பால்வாடி மழலை வீடியோ வைரல்- அமைச்சர் க்யூட் ரிப்ளை!
Embed widget