TN Budget 2022: PTR-ன் அதிரடி 10 அறிவிப்புகள்!
TN Budget 2022: டாப் 10 திட்டங்கள். அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் 1000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும்.
புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இளநிலை பட்டப்படிப்பினை படிப்பதற்கான முழு செலவை மாநில அரசே ஏற்கும். தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகத்திற்கு 2213 பிஎஸ்6 புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும்.
AI, Machine learning, black chain போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க சென்னையில் 54.61 கோடியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
உலக அளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் வகையில் தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்க ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டம் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
பெரியாரின் சிந்தனை அடங்கிய தொகுப்பு 21 இந்திய உலக மொழிகளில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்பாக வெளியிடப்படும்.
பேரிடர் தாக்கும் முன் எச்சரிக்கை வழங்குவதற்கு சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளிட்ட புதிய கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 'பெரியார் நினைவு' சமத்துவபுரங்கள் ₹190 கோடி செலவில் சீரமைக்கப்படும்
2213 பிஎஸ்6 புதிய டீசல் பேருந்துகளும் 500 புதிய மின்பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 40%ல் இருந்து 60 சதவீதமாக உயர்வு. இத்திட்டத்திற்கு மானியமாக 1520 கோடி ஒதுக்கீடு.