Viral: அடேங்கப்பா! எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க...திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட வங்கதேச ஜோடி!
வங்கதேசத்தில் ஒரு ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral: வங்கதேசத்தில் ஒரு ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வித்தியாசமான முறையில் திருமணம்:
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அப்படி அந்த ஒரு நாள் நடக்கும் கூத்தை சிறப்பாக நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை 6 மாதங்களுக்கு முன்பில் இருந்து தொடங்கிவிடுவார்கள். அதிலும், அனைவரும் வியக்கத்தக்க வகையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறைகளில் திருமணங்களை நடத்தி வருகின்றனர். கோடி கணக்கில் பணத்தை செலவழித்து ஊரே வாயை பொளக்கும் அளவுக்கும் திருமணத்தை நடத்தி வருகின்னறனர். குறிப்பாக, ஒரே மாதிரி நடத்தாமல், வித்தியாசமாக நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கின்றனர்.
அதிலும், திருமண அழைப்பிதழை கூட வித்தியாசமாக அச்சடிக்கின்றனர். திருமண அழைப்பிதழ் வழியே அனைவரையும் நெகிழ வைத்து வருகின்றனர். இப்படி, திருமண அழைப்பிதழ் மூலம் தான் தற்போது ஒரு தம்பதி இணையத்தையை திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அதன்படி, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளனர்.
வைரலாகும் திருமண அழைப்பிதழ்:
வங்கதேசத்தைச் சேர்ந்த தம்பதி சஞ்சனா தபசும் சினேகா மற்றும் மஹ்ஜிப் இமோன். இந்த தம்பதிக்கு அக்டோர் 14ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், தற்போது இந்த தம்பதியின் திருமண அழைப்பிதழ் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், திருமணத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் எழுத்தியுள்ளனர். பின்னர், தம்பதியின் பெயர்கள், திருமணம் நடைபெறும் இடம், நேரம் ஆகியவை வழக்கம் போல் இடம்பெற்றிருந்தன. முதலில் திருமணத்தின் முக்கியத்துவம் மற்றும் தம்பதிகள் முதலில் சந்தித்த இடத்துடன் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய கனவுகள், புதிய தொடக்கத்தில் ஒருவரைக்கொருவரை நம்பி எங்கள் புது வாழ்க்கையை தொடங்க உள்ளோம். நாங்கள் திருமண வாழ்க்கையின் புதிய தொடக்கத்தில் அடியெடுத்து வைக்கிறோம். உங்கள் ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும், அன்புக்கும் நன்றி. திருமண விழாவிற்கு உங்கள் வருகைக்கு காத்திருக்கிறோம் என்று கூறி முடிக்கப்பட்டுள்ளது.
Still can't believe that this is a wedding invitation card 😭😭 pic.twitter.com/DeOD2L8dOo
— rayyan definitely | Booktwt stan 📚 (@rayyanparhlo) November 25, 2023
இந்த பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கலாய்த்து தள்ளி வருகின்றனர். இதற்கு ஒருவர் கூறுகையில், " ஆராய்ச்சியாளர்கள் 2 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள். அது இந்த பத்திரிகை மூலம் புரிந்துவிட்டது" என்று நகைச்சுவையோடு பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!