இதுதான் உலகின் மிக விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு! சராசரி பில்லே ரூ.2 லட்சம்! எங்கு தெரியுமா?
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு எது என்று உங்களுக்குத் தெரியுமா?

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ஷாப்பிங் தெரு எது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால், நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்! அந்தப் பெயர் இத்தாலியில் உள்ள வியா மான்டே நெப்போலியன் என்பதுதான்.
மிலனை தளமாகக் கொண்ட இந்த தெரு உலகின் மிகவும் விலையுயர்ந்த ஷாப்பிங் இடமாக முடிசூட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான ஷாப்பிங் இடங்களில் ஒன்றாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2024 க்கு முன்பு, நியூயார்க்கில் உள்ள ஐந்தாவது அவென்யூ இந்த முதலிடத்தை வகித்தது.
இந்நிலையில், மிலனின் ஃபேஷன் மாவட்டத்தில் அமைந்துள்ள வியா மான்டே நெப்போலியன், உலகின் மிகவும் ஆடம்பரமான ஷாப்பிங் இடங்களில் ஒன்றாகியுள்ளது.
இது குஸ்ஸி, பிராடா, லூயிஸ் உய்ட்டன், சேனல் மற்றும் டோல்ஸ் மற்றும் கபனா போன்ற புகழ்பெற்ற டிசைனர் பிராண்டுகளின் முதன்மைக் கடைகளுக்கு தாயகமாக உள்ளது. இந்த தெருவில் பிரத்யேக நகைக் கடைகள் மற்றும் இத்தாலிய ஷூ தயாரிப்பாளர்களும் உள்ளனர்.
ஃபேஷன் கவர்ச்சியைத் தாண்டி, வியா மான்டே நெப்போலியன் தெரு அழகான கட்டிடக்கலை ரத்தினமாக கருதப்படுகிறது. அழகான மற்றும் வரலாற்று கட்டிடங்களை அந்த தெரு கொண்டுள்ளது. சராசரியாக, ஒரு கடைக்காரர் வியா மான்டே நெப்போலியனில் ரூ.2 லட்சம் செலவிடுகிறார்.
இந்த தெரு ஏராளமான பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக ஃபேஷன் வாரம் மற்றும் டிசைன் வாரம் போன்ற நிகழ்வுகளின் போது ஈர்க்கிறது.
மிலனில் வரி விலக்குகள் அதிகமாக கொடுக்கப்படுகின்றன. இதனால் பல செல்வந்தர்கள் மிலனில் வசிக்க வழிவகுத்துள்ளன. பணக்காரர்கள் இன்க்கு வசிப்பதால் ஆடம்பர பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அங்கு மேலும் அதிகரித்துள்ளது.
இதனால்தான் முக்கிய ஆடம்பர பிராண்டுகள் இந்த மதிப்புமிக்க தெருவில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த ஆர்வமாக உள்ளன.
ஆனால் இந்த ஆடம்பர ஷாப்பிங் தெருவில் வாடகைக்கு கடை எடுக்க வேண்டுமானால் கொஞ்சம் சிரமமே! ஏனெனில் சில்லறை இடங்களுக்கான வாடகை செலவுகள் உலகிலேயே மிக அதிகம் இங்குதான்.
வியா மான்டே நெப்போலியனில் ஒரு கடையைத் திறக்க சதுர மீட்டருக்கு ரூ.1.70 லட்சம் செலவாகுமாம். இதன் விளைவாக, வியா மான்டே நெப்போலியனில் உள்ள கட்டிடங்கள் மில்லியன் கணக்கான பவுண்டுகளுக்கு விற்கப்படுகின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

