Travel With ABP: குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானல் க்ளைமேட்டா?அப்போ இங்க வாங்க..
Kalvarayan Hill: குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானல் போக வேண்டும் போல இருந்தால், இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். மனதை மயக்கும் ஏழைகளின் மலை பிரதேசம்...
கள்ளக்குறிச்சி kallakurichi : ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலாப் பயணிகள் கவரும் இடமாக கல்வராயன்மலை உள்ளது. இங்கு பெரியார், மேகம், கவியம், சிறுகலூர் உள்ளிட்ட 10 நீர்வீழ்ச்சிகள், படகு குழாம், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளது. இதனால் கல்வராயன்மலை kalvarayan hills ஏழைகளின் சுற்றுலாத்தலமாக சிறந்து விளங்குகிறது.
கல்வராயன்மலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதியதாக உதயமானது. புதிய மாவட்டத்தில் மலை பிரதேசம், அருவிகள், கோவில்கள், தேவாலயம் உள்ளிட்ட சிறப்பு பெற்ற சுற்றுலா தலங்கள் ஏராளமாக உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 3800 அடி வரை உயரம் கொண்ட கல்வராயன்மலை kalvarayan hills 'ஏழைகளின் மலை பிரதேசம்' என்று அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு அச்சமடைய வைக்கும் கொண்டை ஊசி வளைவுகளும் பல உள்ளன. இந்த மலை பச்சைமலை, ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை ஆகியவற்றுடன் காவிரி ஆற்று வடிநிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. இங்குள்ள கரியாலுாரில் சிறுவர் பூங்கா, படகுத்துறை, மூங்கில் குடில்கள் உள்ளன. அத்துடன் கருமந்துறையில் அரசு பழ பண்ணை போன்ற இடங்களும் உள்ளது.
நீர் வீழ்ச்சிகள்
மேலும் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், மான் கொம்பு, கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற 6 க்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உள்ளது. கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் கொண்ட நகரமான திருக்கோவிலுார் உள்ளது. பழமை வாய்ந்த உலகளந்த பெருமாள் கோவில், நடுநாட்டு சிவ தலங்களில் 11ஆவது தலமாக பாடல் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில்கள் உள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க ஆதிதிருவரங்கம்
மாநில தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படும் 8ம் , 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கபிலர் குன்று, திருநரங்கொன்றை கிராமத்தில் ஜைன குகை, பார்ஸ்வனதா மற்றும் சந்திரபிரபா ஆகிய இரண்டு கோவில்களும் அமைந்துள்ளது. அதேபோல் திருவண்ணாமலைக்கும் மணலுார் பேட்டைக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஆதிதிருவரங்கம் (adhi thiruvarangam) கோவில் உள்ளது. இது ஆதிதிருவரங்கத்திற்கு அடுத்த ஸ்ரீரங்கம் என்ற சிறப்பு பெற்றதாகும்.
குறைந்த பட்ஜெட் கொடைக்கானல்
சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள 100 வருட பழமை வாய்ந்த மேல் நாரியப்பனுார் தேவாலயமும் உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் ஏராளமான வனப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வனப்பகுதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உள்ளது. விழுப்புரம், கடலுார், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், சென்னை போன்ற வெளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் கொடைக்கானல் போக வேண்டும் என்றால் இங்கு ஒருமுறை சென்று வாருங்கள்.
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்