மேலும் அறிய

’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் பவானி ஆற்றில் பரிசல் பயணம், சுவையான உணவு, வனத்திற்குள் நடைபயணம், பவானி ஆற்றில் குளியல் என அட்டகாசமான பயண அனுபவத்தை பரளிக்காடு தரக்கூடும்.

வார விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் உடன் இணைந்து இயற்கையை இரசித்து, இன்புற பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறீர்களா?. இதோ உங்களுக்காகவே காத்திருக்கிறது, பரளிக்காடு சூழல் சுற்றுலா தலம். கோவை நகரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் இயற்கையின் எழில் மாறாமல் இருக்கும் மலைக் கிராமம், பரளிக்காடு. பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள இந்த பகுதி, ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் பவானி ஆற்றில் பரிசல் பயணம், சுவையான உணவு, வனத்திற்குள் நடைபயணம், பவானி ஆற்றில் குளியல் என அட்டகாசமான பயண அனுபவத்தை பரளிக்காடு தரக்கூடும். இதனால் பரளிக்காடு சுற்றுலா தலம் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு உகந்த இடமாக உள்ளது.

’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

இங்கு செல்ல சுற்றுலா பயணிகள் www.combatorewilderness.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 550 ரூபாயும், 5 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 450 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சொந்த வாகனம் அல்லது பொது போக்குவரத்து மூலம் பரளிக்காடு செல்லலாம். பழங்குடியினர் தயாரித்த உணவு வழங்கப்படுவதோடு,  ஆற்றில் பரிசலில் பயணம் செய்து பில்லூர் அணையை கண்டு இரசிக்க முடியும். மாலையில் பவானி ஆற்றில் குளியலோடு சுற்றுலா முடியும்.

’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

தித்திக்கும் பரிசல் பயணம்

நீலகிரியில் உற்பத்தியாகி கேரளாவில் சென்று மீண்டும், தமிழ்நாட்டிற்குள் பாயும் பவானி நதியின் குறுக்கே கட்டப்பட்ட பில்லூர் அணையின் பின்பகுதியில் இக்கிராமம் உள்ளது. ஆறும், ஆற்றங்கரையோர ஆலமரங்களும் அசைந்து கொண்டிருக்க, ஆலமர விழுதுகளிலும், ஊஞ்சலிலும் சிலர் ஆடிக் கொண்டிருப்பர். சுற்றிலும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்க நடுவே ஓடும் ஆறு என இயற்கை ஓவியமாக காட்சியளிக்கும். 
பரிசல் பயணம் செய்ய 20 பரிசல்கள் இருக்கும். ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் லைப் ஜாக்கெட் அணிவிக்கப்பட்டு, பரிசலில் ஏற்றப்படுவர். பரிசல்களில் உள்ளூர் பழங்குடிகள் துடுப்பை போட, பரிசல் ஆற்றில் மிதந்து செல்ல செல்ல, சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க பறவைகளின் ஓயாத சத்தங்களோடு இயற்கை ஏழிலையும், தூரத்தில் தெரியும் பில்லூர் அணையையும் கண்டு ரசிக்கலாம். பின்னர் காட்டிற்குள் சிறிய நடை பயின்று வர, மதிய உணவு தயாராக இருக்கும்.

’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

சுவையான உணவிற்கு பின்னர் அத்திக்கடவு பாலத்தில் இருந்து ஆற்றங்கரையோரத்தில் நடைபயணம் துவங்கும். சலசலத்து ஓடிக் கொண்டிருக்கும் பவானி நதிக்கரையோரம், பல விதமான பறவைகளின் சத்தங்களும், பூச்சிகளின் ரீங்காரமும் கேட்கும். இருவாச்சி பறவைகளை கண்டு இரசிக்க முடியும். இயற்கையோடு நடந்து ஆற்றில் ஒரு ஆனந்த குளியலோடு பரளிக்காடு பயணம் முடியும்.

பூச்சமரத்தூர் தங்கும் விடுதிகள்

’குடும்பதோடு டூர் போறீங்களா?’ - அட்டகாசமான பயண அனுபவத்தை தரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா

அத்திக்கடவு பாலத்திற்கு முன்பு இடது புறம் செல்லும் சாலையில், பரளிக்காடுவிற்கு நேர் மேலே இருக்கிறது, பூச்சமரத்தூர் தங்கும் விடுதிகள். இது சுற்றுலா பயணிகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறையினரிடம் தனியாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வது கட்டாயம். இயற்கையான சூழலில் இரம்மியமான தங்கும் இடமிது. தங்குமிடத்தை சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்கும். போட்டோ எடுக்க அங்காங்கே மான், காட்டு மாடு கொம்புகளும், எலும்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும். இயற்கையின் அழகை இரசித்தபடி இரவு பொழுதை கழிக்க முடியும். மொத்ததில் பரளிக்காடு பயணம் இயற்கை கண்களுக்கும், மனதிற்கும் விருந்து படைக்க இனிமையான பயண அனுபவமாக இருக்கக்கூடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget