மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி 12 முதல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

IRCTC செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு மாற்றங்கள் நாளை ஜனவரி 12ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். IRCTC செயலி வாயிலாக இவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு மாற்றங்கள் ஜனவரி 12ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி 12 முதல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

வழக்கமாக இந்தியாவில் ஒரு ரயில் புறப்படுவதற்கு 60 நாட்களுக்கு முன்னரே அதற்கான பொது டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கிவிடும். அதேபோல ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பயணிகள் தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட ஏதுவாக 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை நீண்ட காலமாகவே இந்தியாவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏஜென்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அது மட்டும் இன்றி பலரும் போலி IRCTC கணக்குகளைக் கொண்டு டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் அதனை அதிக விலைக்கு பயணிகளிடம் விற்பனை செய்கின்றனர் என்ற ஒரு புகார் ரயில்வேக்கு வந்தது.

எனவே ரயில் டிக்கெட் முன்பதிவியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு மாற்றங்களை அதிரடியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து ஆதார் இணைக்கப்படாத ஐஆர்சிடிசி கணக்குகளில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு முன்னுரிமை வழங்கி வருகிறது. முதலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 10 நிமிடங்களுக்கு , IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு முடித்தவர்கள் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இது வெற்றி அடையவே இதனை ரயில்வே படிப்படியாக விரிவாக்கம் செய்து முதல் 4 மணி நேரம் என நீட்டித்தது.

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஜனவரி 12 முதல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!

இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாள் முழுவதுமே IRCTC கணக்கில் ஆதாரை இணைத்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதில் இருந்து இரவு 12 மணி வரை IRCTC கணக்கில் ஆதாரை இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும். ஆதார் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்களால் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டர்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. IRCTC  செயலி அல்லது இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும்.எனவே அடிக்கடி ரயில்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய IRCTC கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து வைத்திருந்தால் தான் இனி பொது டிக்கெட் முன்பதிவும் மேற்கொள்ள முடியும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget