Vandalur Zoo 7D Theatre: வண்டலூர் பூங்காவில் ஹாலிவுட் தரம்.. மக்களுக்காக காத்திருக்கும் தரமான சம்பவம்..!
Vandalur Zoo 7D Theatre: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7D தியேட்டர் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக வரவுள்ளது.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 7D திரையரங்கு ( 7D Theatre Inaugurated at Vandalur Zoo ) பொதுமக்கள் பார்வைக்காக தயாராகி உள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா - Vandalur Zoo
சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக, வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பத்தாயிரம் பார்வையாளர்கள் வரை வந்து செல்கின்றனர்.
வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் மக்கள் பார்வைக்காக உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா ஆகியவை தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில், லயன் சபாரி மற்றும் மான் சபாரி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7டி தியேட்டர் - 7D Theater In vandalur zoo
பூங்காவிற்கு வருவோர், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்பதுடன், அவை தொடர்பான திரைப்படங்களை நவீன தொழில் நுட்பத்தில் பார்த்து ரசிக்கும் வகையில், 7டி தியேட்டர் கட்டப்பட்டுள்ளது.. மொத்தம் 4 கோடி ரூபாய் செலவில், 32 இருக்கைகளுடன் இந்த தியேட்டர் கட்டப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 கிலோ வாட் சூரிய மின் நிலையம் மற்றும் அதிநவீன 7D திரையரங்கம் ஆகியவற்றை வனத்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
பசுமையான மற்றும் நிலையான உயிரியல் பூங்காவை ஊக்குவிக்கும் வகையில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. ஐந்து வெவ்வேறு இடங்களில் 180 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதன் மூலம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. உயிரியல் பூங்காவின் மொத்த தேவை ஆற்றல் 250KW மற்றும் உயிரியல் பூங்காவின் சராசரி உச்ச தேவை 212KW ஆகும்.
இந்த சுற்றுச்சூழல் நட்பு வசதியானது, உயிரியல் பூங்காவின் 85 விழுக்காடு மின் தேவையை பூர்த்தி செய்யும் மற்றும் சோலார் மூலம் மீதமுள்ள ஆற்றல் தேவை விரைவில் நிறுவப்படும். இது கார்பன் அளவைக் குறைத்து உயிரியல் பூங்காவை செம்மைப்படுத்தும். இம்முயற்சியானது இந்தியாவில் 85 விழுக்காக்கும் அதிகமான சூரிய மின் சக்தியை நுகர்வுக்காக நிறுவிய முதல் உயிரியல் பூங்கா இதுவாகும்.
அதிநவீன 7D திரையரங்கம் பொழுதுபோக்குடன் கல்வியை வழங்குவதன் மூலம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் இந்த திட்டம் TANII திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. தியேட்டர் 32 இருக்கைகள் திறன் கொண்டது. நல்ல ஒலி வீடியோ மற்றும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த தியேட்டர் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஈர்க்கக்கூடிய மற்றும் ஊடாடும் கற்றல் அனுபவத்தை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக ஒரு சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் பொங்கல் விடுமுறை தினத்திற்கு பயஅதிகாரிகள்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். 7 டி தியேட்டர் பார்வையிட 50 ரூபாய் முதல் ரூ.100 கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

