மேலும் அறிய

Prabhakar Raghavan: கூகுள் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளி நியமனம்; யார் இந்த பிரபாகர் ராகவன்?

Google New Chief Technologist: ஐஐடி சென்னையில் பட்டம் முடித்த பிரபாகர் ராகவன், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். 

உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? பார்க்கலாம்.

கூகுள், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, ஐபிஎம், அடோப் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். கூகுள் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் சுந்தர் பிச்சை செயல்பட்டு வரும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட், ஓப்பன்ஏஐ ஆகியவற்றால் கூகுள் கடும் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கூகுளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. Perplexity உள்ளிட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார். 

யார் இவர்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபாகர் ராகவன், தன் ஆரம்ப காலங்களை போபாலிலும் சென்னையிலும் கழித்துள்ளார்.  ஐஐடி சென்னையில் பட்டம் முடித்த இவர், கலிஃபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். 

யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய பிரபாகர், search ranking, ad systems மற்றும் marketplace design ஆகிய துறை சார்ந்து பணியாற்றி உள்ளார். 64 வயதான அவர், 2012ஆம் ஆண்டு கூகுளில் இணைந்துள்ளார். கூகுள் கிளவுட், கூகுள் ஆப்ஸ் ஆகிய துறைகளுக்குத் தலைமை தாங்கிய பிரபாகர், ஜி மெயில், கூகுள் ட்ரைவ் ஆகியவற்றையும் மேலாண்மை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு கூகுள் சர்ச் பிரிவுக்கு பிரபாகர் பொறுப்பேற்றார்.

20 ஆண்டு அனுபவம் 

20 ஆண்டுகளுக்கும் மேலாக துறை சார்ந்து இயங்கி வரும் இவர், 100-க்கும் மேற்பட ஆராய்ச்சித் தாள்களைப் பிரசுரம் செய்துள்ளார். 20 காப்புரிமைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.

கூகுளில் மூத்த துணைத் தலைவராக இருந்தவருக்கு, தற்போது தலைமை தொழில்நுட்ப நிபுணர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue | Vellore DMK Issue | ”நாளைக்கு நீ கடைபோட மாட்ட” திமுகவினர் அட்ராசிட்டி? நிகழ்ச்சியில் நடந்த சண்டைTrump Request Elon Musk | ”சுனிதாவை காப்பாத்துங்க..”உதவி கேட்ட ட்ரம்ப் உடனே இறங்கிய எலான் மஸ்க் | Sunita Williams

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
திமுக கொடி பொருத்திய கார் பறிமுதல்.! சூடுபிடிக்கும் ஈசிஆரில் பெண்களை துரத்திய விவகாரம்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
Watch Video: திமுகவை பங்கமாக கலாய்த்த பாஜக! இசிஆர் விவகாரத்தில் ட்ரோல் வீடியோ ரிலீஸ்!
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
டெல்லி குளிரால் 476 உயிரிழப்பு: தலைமைச் செயலாளர், காவல் ஆணையருக்கு நோட்டீஸ்
DMK Vs ADMK: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
DMK Vs ADMK: சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
Governor Questions CM: காந்தி இன்றும் கேலி செய்யப்படணுமா.? முதலமைச்சருக்கு ஆளுநர் கேள்வி
காந்தி இன்றும் கேலி செய்யப்படணுமா.? முதலமைச்சருக்கு ஆளுநர் கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
Governor RN Ravi: ”காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா?” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி
CSK New Jersy: சென்னை ரசிகர்களே! சிஎஸ்கே ஜெர்சியில் அதிரடி மாற்றம்! 2025ல் இப்படித்தான் வருவாங்க
CSK New Jersy: சென்னை ரசிகர்களே! சிஎஸ்கே ஜெர்சியில் அதிரடி மாற்றம்! 2025ல் இப்படித்தான் வருவாங்க
Embed widget