மேலும் அறிய

WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?

WhatsApp Update: வாட்ஸ் அப்பில் வெளியாக இருக்கும் புதிய வாட்ஸ் அப் ஃபில்டர் அப்டேட் பற்றி இங்கே காணலாம்.

வாட்ஸ் அப் சாட்டில் புதிதாக ‘லிஸ்ட்’ ஃபில்டர் வசதி அறிமுகம் செயப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கிய பிறகு தங்களது பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயன்பாட்டு அனுபத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய தொழில்நுட்ப அப்டேட்களை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

தனிப்பட்ட பயன்பாடு, வேலை, தொழில் உள்ளிட்டவற்றுக்கு வாட்ஸ் அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களுக்கு அதன் அனுபவத்தை சிறப்பாக செய்ய வேண்டிய அப்டேட்களை வழங்கி வருகிறது. ஜூன்,2024 ம் ஆண்டு மெட்டா AI வெளியானது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர், இன்ஸ்டாகிராம் என இவை மூன்றிலும் உங்களுக்கு தேவையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கூகுளில் தேட வேண்டிய அவசியத்தை குறைத்துள்ளது எனலாம். 

WABetainfo-வில் வெளியாகியுள்ள தகவலின் படி, வாட்சபில் புதிதாக 'Custom lists' சில  Android 2.24.22.5 Beta வர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், குடும்பம், பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் என வகை பிரித்து லிஸ்ட் செய்து வைக்கலாம். இது சாட் பாக்ஸில் சர்ச் Tab-ல் Favourites, Groups அருகில் இருக்கும். 

இவ்வாறு செய்வதன் மூலம் வாட்ஸ் அப் சாட்டில் யாருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமோ அவர்களை லிஸ்ட் வைத்து எளிதாக அவர்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். அதோடு மட்டுமல்லாமல் பயனர்களை கவனத்துடன் செயல்படவும் இந்த ஃபில்டர் உதவும் என மெட்டா தெரிவித்திருக்கிறது. தேவையில்லை எனில் இதை டெலீட் செய்யலாம். 

Contact Save Update:

இப்போது வெளியாகியுள்ள அப்டேட்டில் வாட்ஸ் அப் செயலில் புதிய தொடர்பு எண்களை சேமிக்க முடியும். ஏற்கனவே, மொபைலில் சேமித்த எண்கள் மட்டுமே வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும் என்றிருந்தது. இப்போது வாட்ஸ் அப்ல தொடர்பு எண்ணை சேவ் செய்ய முடியும்.  'Sync Contacts to Phone' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது 'Choose to Save only WhatsApp or Sync to your Phone' இவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ளலாம். தொழில் ரீதியாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள், தனிப்பட்ட பயன்பாடு என எதுவாக இருந்தாலும் அதற்கேற்றவாறு செட்டிங்ஸை மாற்ற முடியும். 

இந்த அப்டேட் விரைவில் வாட்ஸ் அப் செயலில் வெளிவரலாம். ஆனால், இன்னும் இது தொடர்பாக மெட்டா நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget