மேலும் அறிய

CyptoCurrency | கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

டிஜிட்டல் தளத்தில் செயல்படும் கிரிப்டோகரன்சி என்றால் என்ன தெரியுமா? அது எப்படி செயல்படுகிறது தெரியுமா?

சமீபகாலங்களில் உலகத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மிகவும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோகரன்சிதான். பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. இந்தச் சூழலில் கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? எவ்வாறு பயனளிக்கிறது?

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். இதனால் அந்த விஷயங்கள் இது மிகவும் பயனளிக்கிறது. மேலும் இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோகரன்சிகளை முதலில் டாலர் கொண்டு வாங்க முடியும். குறிப்பாக பிட்காயின் கரன்சியை டாலர் வைத்து வாங்கலாம். இதர கிரிப்டோ கரன்சிகளை பிட்காயின் வைத்து வாங்கலாம். முதலில் கிரிப்டோ கரன்சி வாங்க இணையத்தில் வாலெட் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். 

CyptoCurrency | கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

கிரிப்டோ கரன்சி எப்படி செயல்படுகிறது?

கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது.  கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும். ஒரு கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து நௌன்ஸ், கிரிப்டோ ஹஸ் உள்ளிட்டவையும் சேர்த்து உருவாக்கப்படும். இவை ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியுடனும் இருக்கும். இது பொது ரிஜிஸ்டரை பயன்படுத்துவதால் இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது யாரை வாங்குகிறார்கள், யார் விற்கிறார்கள் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்திற்கு சற்று ஒட்டிய மாதிரி இருப்பது தான் கூகுள் டாக்ஸ். கூகுள் டாக்ஸ் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் அது இயங்கும் முறை பிளாக்செயின் முறை போல கிட்டத்தட்ட இருக்கும். 

அதாவது ஒரு கூகுள் டாக்ஸ் ஃபைலை நாம் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும்போது, அதை அனைவரும் ஒரே சமயத்தில் மாற்றமுடியும். அந்த மாற்றங்கள் அனைத்தும் ஃபைலில் தெரியும். நாம் அனுப்புவது உண்மையான ஃபையில் தானே தவிர அதின் நகல் அல்ல. அதேமாதிரி தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். ஆனால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகிராஃபி என்ற பாதுகாப்பு விதிகள் கூடுதலாக இருப்பதால் இது சற்று வேறு மாதிரியாக இயங்கும். 

CyptoCurrency | கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

உலகில் தற்போது எவ்வளவு கிரிப்டோகரன்சி உள்ளது?

உலகில் தற்போது 6700 கிரிப்டோ கரன்சி புழக்கத்தில் உள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும். இவற்றில் முக்கியமான கிரிப்டோகரன்சி பிட்காயின்தான். ஏனென்றால் அதன் மதிப்பு மட்டும் 1.2 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. 

  • டாப்-5 கிரிப்டோ கரன்சி:
    • பிட்காயின்- 1.2 டிரில்லியன் டாலர்
    • ஈதரியம்-234 பில்லியன் டாலர்
    • பினான்ஸ் காயின்- 87 பில்லியன் டாலர்
    • எக்ஸ்.ஆர்.பி - 81 பில்லியன் டாலர்
    • டீதர் - 45.4 பில்லியன் டாலர்

கிரிப்டோகரன்சி ஏன் பிரபலமாக உள்ளது?

கிரிப்டோ கரன்சி உலகளவில் மிகவும் பிரபலமாக ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை 

  • பிட்காயின் கரன்சியை எதிர்காலத்தில் இருக்க போகும் முக்கியமான க்ரிப்டோகரன்சியாக பல நாட்டினர் கருதுகின்றனர். அதனால் அதன் விலை மதிப்பு அதிகரிப்பதற்குள் பலர் தற்போது வாங்கி அடுக்கிக்கொண்டு வருகின்றனர். 
  • இந்த விதமான கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் தலையிடாது என்பதால் இதன் மதிப்பை பணவீக்கம் வந்தால் குறைக்கமுடியாது. 
  • இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.
  • கிரிப்டோகரன்சி எந்தவித வட்டியும் இல்லாமல் மதிப்பு உயர்வதால் அதனை பிற்காலத்தில் ஒரு பெரிய கரன்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கருதி சிலர் வாங்குகின்றனர். 

CyptoCurrency | கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது?

கிரிப்டோகரன்சி முதலீடு செய்யலாமா?

கிரிப்டோகரன்சி பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாக ஒன்றாக இருந்தாலும் இதன் சந்தை மதிப்பு மிகவும் மோசமானது. ஏனென்றால் திடீரென உயரும் மதிப்பு அதைவிட வேகமாக குறையும் வாய்ப்பும் உள்ளது. உதாரணமாக ஒரு பிட்காயின் 2017ல் 20 ஆயிரம் டாலர்கள் வரை வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால் 2020-ஆம் ஆண்டில் அது 3200 டாலர்களாக குறைந்தது. இதனால் இதில் முதலீடு செய்வது மிகவும் சிக்கலான ஒன்று வல்லுநர்கள் கருதுகின்றனர். 

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி நிலைப்பாடு என்ன?

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சி பெரும்பாலும் ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் இதனை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை. எனினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை இந்தியாவில் சட்டரீதியில் முறை படுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு மிகவும் குறைந்தே காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்

வீடியோ

செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Embed widget