Vodafone | ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் வோடஃபோனின் அசத்தல் ஆஃபர்..!
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னோடியாக பார்க்கப்படும் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் திட்டங்களை முந்த வேண்டும் என்பதே பல நிறுவனங்களின் குறிக்கோளாக உள்ளது.
சமீப காலமாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், புதிய பயனாளர்களை தன்வசப்படுத்துவதற்கும் போட்டி போட்டுக்கொண்டு பல அதிரடி திட்டங்களை வழங்கி வருகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னோடியாக பார்க்கப்படும் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தும் திட்டகளை முந்த வேண்டும் என்பதே பல நிறுவனங்களின் குறிக்கோளாக உள்ளது. அந்த வகையில் விஐ என அழைக்கப்படக்கூடிய வோடபோன் ஐடியா நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு பல அசத்தல் ஆஃபர்களை வழங்கி வருகிறது. குறிப்பாக கொரோனா சூழலில் பலரும் வேலையிழந்துள்ளனர். சிலருக்கு வருமானம் குறைந்துள்ளது. அப்படியான விஐ வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக , குறைந்த விலையிலான சில ஆஃபர்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
அதன் அடிப்படையில் தற்போது ரூபாய் 75-க்கும் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அன்லாக் 2.0 என்ற பெயரில் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது வோடபோன் ஐடியா. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் Vi இலிருந்து Vi நெட்வொர்க் அழைப்பினை மேற்கொள்ள இலவச 50 நிமிடங்களை பெற முடியும்.மேலும் 50MB டேட்டாவும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 15 ஆகும். முன்னதாக 30 நாட்கள் வேலிடிட்டி திட்டங்களை மட்டுமே வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தி வந்தது. இந்த திட்டங்களை 44475# ஐ டயல் செய்யலாம் அல்லது 121153 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலமும் ரூ 75 க்கான ஆஃபரை பெற முடியும் Google Pay போன்ற UPI செயலிகள் ரீச்சார்ச் செய்பவராக இருந்தால் , அதன் மூலமாகவும் இந்த ஆஃபர் குறித்த விவரங்களை பெறலாம். குறுஞ்செய்தி வாயிலாகவும் விஐ நிறுவனம் தொடர் நினைவூட்டலையும் தருகிறது. முன்னதாக 49 ரூபாய்கான ரீச்சார்ச் ப்ளான் ஒன்றை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா , அதில் 38 ரூபாய்க்கான டாக் டைம், லோக்கல் மற்றும் நேஷனல் அழைப்புகளுக்கு நொடிக்கு 0.25 பைசா மற்றும் 200 MB க்கான டேட்டா சலுகைகளை வழங்கியது.
இது தவிர ரூ 98 மற்றும் ரூ 99 என இரு பிளான்களை அறிவித்திருந்தது. அதன்படி 98 ரூபாய்க்கான பேக்கில் கூடுதல் டேட்டா சேவையான, 128 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கும், 99 ரூபாய்க்கான பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டட் அழைப்புகளை 18 நாட்களுக்கு மேற்க்கொள்ளும் வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதே சேவையை 20 நாட்களுக்கு பெற ரூ.109 ஆஃபர் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.Vi நிறுவனம் சமீபத்தில் ரூ. 447 விலையில் ஒரு ப்ரீபெய்ட் சலுகையை அறிவித்திருந்தது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அந்த சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்னதாக இதேபோன்ற ஒரு சலுகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் அறிவித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.