மேலும் அறிய

Twitter Lay off : ஆபீஸுக்கு வந்துக்கிட்டு இருக்கீங்களா, அப்படியே வீட்டுக்கு போங்க.. பணியாளர்களை குறைக்கும் ட்விட்டர்?

பணிநீக்கத்தால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு அவர்களது பணி மின்னஞ்சல் மூலம் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து ஆட்குறைப்பு நிகழுமா இல்லையா என்கிற கேள்வி இழுபறியாக நீடித்து வந்தது.இதை அடுத்து பசிபிக் நேரப்படி இன்று காலை 9 மணிக்குள் அது தொடர்பான தகவல்களை தனது ஊழியர்களுக்கு மெயில் வழியாக அந்த நிறுவனம் அனுப்பும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து பணிநீக்கத்தால் பாதிக்கப்படாத ஊழியர்களுக்கு அவர்களது பணி மின்னஞ்சல் மூலம் அதுகுறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அவர்களது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Twitter Lay off : ஆபீஸுக்கு வந்துக்கிட்டு இருக்கீங்களா, அப்படியே வீட்டுக்கு போங்க.. பணியாளர்களை குறைக்கும் ட்விட்டர்?

முன்னதாக, ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி பணிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி இருந்தது.

உலகில் மிகப்பெரும் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இந்நிலையில்தான் சமீபத்தில் ட்விட்டரில் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதோடு ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்கினார். அதன் பங்குகளை வாங்கியதையடுத்து அவர் அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக உள் நுழைந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்க்கிற்கும் போடப்பட்டது.  சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி தன்வசப்படுத்தினார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதுமே ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால் உள்பட அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கம் செய்தார். மேலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் உயர் அதிகாரிகள் மட்டுமல்லாமல், பணியாளர்களையும் பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்கம் ட்விட்டர் பங்குகளை நிறுவனத்தின் பணியாளர்கள் வங்குவதை தவிர்க்கவே என கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்படாதவர்களுக்கு அதிக பணி சுமை கொடுக்கப்பட்டுள்ளது.  மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவைச் சந்திக்க ட்விட்டரில் உள்ள பொறியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று எச்சரிக்கையைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காம்ப் ஆஃப்கள் அல்லது கூடுதல் மணி நேரங்களுக்கு பணம் செலுத்துவது பற்றி அவர்களால் பேச முடியாது, அப்படி பேசினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், அதனை தவிர்க்கவே இந்த கட்டுப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது.  

புளூ டிக்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக ட்விட்டர் பொறியாளர்களுக்கு நவம்பர் 7ம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை தொடங்க வேண்டும் அல்லது வேலையை இழக்க நேரிடும் என மஸ்க் கெடு விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சில ட்விட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகின்றன.

பொறியாளர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் 50 சதவீத ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் கட்ட பணிநீக்கங்களில் சுமார் 2000 தொழிலாளர்கள் நீக்கப்படலாம்.  பணிநீக்கம் செய்வதற்கு முன்பே தலைமை அதிகாரிகள் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு விடைபெற்றுள்ளனர். இதனால் ட்விட்டர் முழுமையாக மஸ்க் கட்டுக்குள் வந்தது.   ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற சிறந்த பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களை ட்விட்டர் தளத்திலிருந்து பின்வாங்கியுள்ளனர். ட்விட்டரில் விளம்பரதாரர்களின் நம்பிக்கைக்கு இது மேலும் ஒரு அடியாக இருக்கும்.

சிறந்த விளம்பர நிறுவனமான IPG, கோகோ கோலா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதன் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டரில் பிரச்சினைகள் தொடர்வதற்கு முன் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. வெஸ்டெட் ஷேர் என்பது நிறுவனத்தில் பங்குகளை வழங்கும் ஊழியர்களுக்கு அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிறுவனர்களுக்கு, பெரும்பாலும் ஓய்வுக்குப் பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பங்குகளைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இந்த பங்கு விருப்பங்களை மீட்டெடுப்பதற்கான 100 சதவீத உரிமைகளை அவர்கள் பெறுகிறார்கள். மஸ்க்கின் கீழ், டெஸ்லா ஏற்கனவே பங்கு மானியங்களைப் பெறுவதற்கு முன்பு மக்களை பணிநீக்கம் செய்ததற்காக வழக்குகளை எதிர்கொண்டார், அதனால்தான் ட்விட்டர் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget