Twitter Notes: அதிகம் எழுத விருப்பமா? விரைவில் வருகிறது ’டிவிட்டர் நோட்ஸ்’ புதிய அப்டேட்!
Twitter Notes: டிவிட்டரில் விரைவில் வருகிறது ‘டிவிட்டர் நோட்ஸ்’. தற்போது பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
உலகளவில் மிகவும் பிரபலமான மைக்ரோ- பிளாகிங் தளமான (Micro-blogging) டிவிட்டர்( Twitter) தனது புதிய அப்டேட்டான நோட்ஸ் (Notes feature) வசதியை உருவாக்கி வருவதை உறுதி செய்துள்ளது.
டிவிட்டர் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய புதிய வசதிகளை வழங்கும் நோக்கில் அடுத்ததாக நோட்ச் என்ற ஆப்சனை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் டிவிட்டரில் 280 எழுத்துகளுக்கு மேல் பதிவிட முடியும் என்பது சிறப்பு.
இந்த வசதி தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் அதுவும் பரிசோதனை முயற்சியில் உள்ளதாகவும் டிவிட்டர் தெரிவித்துள்ளது.
✨ Introducing: Notes ✨
— Twitter Write (@TwitterWrite) June 22, 2022
We’re testing a way to write longer on Twitter. pic.twitter.com/SnrS4Q6toX
Write’ tab என்ற பிரிவில் 280 எழுத்துகளுக்கு மேல் எழுதப்படும் இது டிவிட்டரில் ஷேர் செய்ய முடியும்.
விரைவில் அறிமுகமாக இருக்கிற ’டிவிட்டர் நோட்ஸ்’ மக்களின் டிவிட்டர் பயன்பாட்டை முற்றிலும் மாற்றிவிடும் என்று கூறப்படுகிறது.
A small group of writers are helping us test Notes. They can be read on and off Twitter, by people in most countries. pic.twitter.com/IUVVkr2vnl
— Twitter Write (@TwitterWrite) June 22, 2022
இருப்பினும், குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துகளை வெளிப்படுத்தும் அடிப்படையை கொண்ட டிவிட்டர், இந்தப் புதிய அப்டேட் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், இதற்கான பயன்பாடு அதிகரிக்க காலம் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிவிட்டரில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட எழுத்துக்களாக 140 ஆக நிர்ணயம் செய்திருந்தது. பின்னர், அதை 280 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ‘டிவிட்டர் நோட்ஸ்’ அப்டேட் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்