Twitter Down: கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய X.. காரணம் என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்!
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
![Twitter Down: கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய X.. காரணம் என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்! Twitter Down X Stops Working Second Outage in 24 Hours Users Complained Know Details Twitter Down: கடந்த 24 மணிநேரத்தில் இரண்டாவது முறையாக முடங்கிய X.. காரணம் என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/05d783597f8d0a027acec2fa48dac8811695138466556571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
எலன் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக முடங்கியதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Twitter / x down 🤔#twitterdown #xdown pic.twitter.com/rkS9ZljgqA
— Lavya Chauhan 🇮🇳 (@LavyaJsr) September 19, 2023
திங்கட்கிழமையான நேற்று முக்கிய நகரங்களான நியூயார்க் சிட்டி, சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் இருந்த பெரும்பாலான பயனர்கள் தங்களது ‘மை ஃபீட்’ பக்கத்தை பார்க்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். இந்தநிலையில், தற்போது பல்வேறு பயனர்கள் தங்கள் ட்விட்டர் சரிவர இயங்கவில்லை என மீண்டும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
BREAKING: Twitter Down for several users.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 19, 2023
||#TwitterDown|#XDown|#ElonMusk|| pic.twitter.com/2PjDQ7KWKi
இதைதொடர்ந்து, ட்விட்டர் பயனாளி ஒருவர் தனது பதிவில், “ ட்விட்டர் பக்கம் முடங்கியதா..? அல்லது எனக்கு மட்டும்தான் இப்படி ஆகிறதா? என கேள்வி எழுப்பினார். பலரும் தற்போது ட்விட்டர் பக்கம் முடங்கியது தொடர்பான ஸ்கீரின் ஸாட்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
எதற்காக இப்படி ஆனது..? முடங்கியதற்கு என்ன காரணம் என்பது குறித்து ட்விட்டர் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
வேறு எங்கெல்லாம் இந்த பிரச்சனை..?
நியூயார்க் நகரத்தை தொடர்ந்து இங்கிலாந்து, சீனா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. புகாரளிக்கப்பட்ட சிக்கல்களில் ஏறத்தாழ 49% ஆப்ஸில் உள்ள சிக்கல்களையும், 41% இணையதளத்திலும், மீதமுள்ள 10 சதவீதம் சர்வர் இணைப்பிலும் சிக்கல் இருந்ததாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இந்த அனைத்து தகவல்களையும் ஆன்லைன் செயலிழப்பை கண்காணிக்கும் தளமான டவுண்டெக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)