மேலும் அறிய

Truecaller For Whatsapp: ஸ்பேம் கால் பிரச்னை.. வாட்ஸ்-அப் செயலியிலும் வருகிறது ட்ரூ காலர் பயன்பாடு..

ஸ்பேம் கால் பிரச்னைகளை தவிர்க்கும் நோக்கில், வாட்ஸ்-அப் செயலியிலும் விரைவில் தங்கள் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ட்ரூ-காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பேம் கால் பிரச்னைகளை தவிர்க்கும் நோக்கில், வாட்ஸ்-அப் செயலியிலும் விரைவில் தங்கள் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ட்ரூ-காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்-அப் செயலியில் ட்ரூ காலர் பயன்பாடு:

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூ காலர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி , வாட்ஸ் - அப் உள்ளிட்ட குறுந்தகவல் அனுப்பும் செயலியிலும் தங்களது சேவை விரைவில் தொடங்க உள்ளது. புதிய வசதி தற்போது சோதனை முயற்சியில் இருப்பதாகவும், மே மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவித்தார். 

ட்ரூ-காலர் பயன்பாடு:

உடனடி தகவல் பரிமாற்றத்திற்காக செல்போன்கள் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தாலும், தற்போது அது முழுமையாக வணிக நோக்கமாக மாறியுள்ளது. வீட்டிற்கான தேவையான சிறு பொருட்கள் முதற்கொண்டு வீட்டையே வாங்கும் வரையிலான பல விளம்பரங்கள் மற்றும் அதற்கான முகவர்கள் செல்போன்கள் மூலம் தான் அதன் பயனாளர்களை அணுகுகின்றனர். அதில் ஒரு சில அழைப்புகள் பயனுள்ளதாக இருந்தாலும், பெரும்பாலானவை அநாவசியமானதாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளன. அழைப்பை மேற்கொள்வது யார் என்று தெரியாத சூழலில், புதிய எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளையும் ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான் ட்ரூ-காலர் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.   அறிமுகம் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தாலும் அது யார் என்பது தொடர்பான விவரங்களை ட்ரூ - காலர் செயலி மூலம் அறியலாம்.

35 கோடி பயனாளர்கள்:

ட்ரூ காலர் நிறுவனம் உலகம் முழுவதும் 35 கோடி பயனாளர்களை கொண்டிருந்தாலும், அதில் 25 கோடி பேர் இந்தியர்கள் தான். உலகம் முழுவதும் விளம்பரங்கள், சந்தாதாரர்கள் மூலம் இந்த நிறுவனம் வருவாய் ஈர்த்து வருகிறது. அதோடு அநாவசிய அழைப்புகளை தவிர்ப்பதற்கு உதவுவதால், இந்தியர்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் தான், சாதாரண அழைப்புகளை தாண்டி தற்போது இணைய வசதியால் செயல்படும், வாட்ஸ்-அப் செயலியிலும் ஸ்பேம் கால்கள் அதிகரித்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் டெலிமார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் கால் என, மாதத்திற்கு சராசரியாக 17 அநாவசிய அழைப்புகளை பயனாளர்கள் பெற்று வருவதாக, ட்ரூ காலர் நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன.  

செயற்கை நுண்னறிவு திறன்:

இந்தியாவின் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம், செயற்கை நுண்ணறிவு பில்டர்க்ளை பயன்படுத்தி தங்கள் நெட்வொர்க்குகளில் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கத் தொடங்க வேண்டும் என ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வலியுறுத்தியது. அத்தகைய தீர்வைச் செயல்படுத்த தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடி வருவதாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெலிமார்க்கெட்டிங் முகவர்கள் இணைய அழைப்பிற்கு மாறுவது சந்தைக்கு மிகவும் புதியது எனவும், கடந்த இரண்டு வாரங்களாக, வாட்ஸ்-அப்  செயலில் மூலமான ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்து உள்ளதாகவும் ட்ரூ காலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தான், வாட்ஸ்-அப் செயலியில் அழைப்பு மேற்கொள்பவரை அடையாளம் காண்பதற்கான, தங்கள் சேவை விரைவில் தொடங்கும் என ட்ரூ-காலர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் திடீர் அனுமதி... காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மொபைல் போன் திடீர் அனுமதி... காரணம் தெரியுமா?
Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. என்னென்ன புதிய அம்சங்கள் தெரியுமா?
Galaxy போன் வைத்திருக்கிறீர்களா? வந்துவிட்டது One UI 9 அப்டேட்.. புதிய அம்சங்கள் தெரியுமா?
ரூ.59,900 முதல் iPhone! புதிய iPhone 18 வருவதற்கு முன் ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிரடி சலுகை!
ரூ.59,900 முதல் iPhone! புதிய iPhone 18 வருவதற்கு முன் ரிலையன்ஸ் டிஜிட்டலின் அதிரடி சலுகை!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!
இலவச கேஸ் மற்றும் AppleCare+ சலுகையுடன் ரூ. 69,990-க்கு ஐபோன் 17 புரோ!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
Tata Sierra: க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
க்யூட்டோ க்யூட்.! சியராவில் லெஜண்ட் சீரிஸை இறக்கிய டாடா.! கூடுதல் அம்சங்கள், கூடுதல் மதிப்பு; முழு விவரம்
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
Embed widget