பெகசஸ் அச்சுறுத்தல்: VPN பயன்படுத்தினாலும் தப்பிக்க முடியாது!
பெகசஸ் போன்ற ஸ்பைவேர் ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கும் போது அதே தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
பெகசஸ் ஸ்பைவர் என்பது இஸ்ரேலைச் சேர்ந்த என். எஸ். ஓ நிறுவனம் உளவு பார்ப்பதற்கென்றே உருவாக்கியுள்ள மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் உதவியோடு மொபைல் போன்ற தொழில்நுட்பச் சாதனங்களை கண்காணித்து வரும் நிலையில், அதில் இருக்கக்கூடிய மெசேஜ்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை ஒட்டுக்கேட்பதோடு தகவல்களையும் திருடும் பணிகளில் ஈடுபடுகிறது. குறிப்பாக இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், ஊடகவியாளர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களின் மொபைல் போன்கள் ஒட்டுக்கேட்பதாக செய்திகள் வந்த நிலையில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பெகசஸ் ஸ்பைவர் மூலம் நம்முடைய மொபைல் போன்களும் கண்காணிப்பட்டுள்ளதா? என்ற சந்தேகங்கள் பலருக்கு எழுந்து வருகிறது.
பெகசஸைத் தவிர, ஹார்ன்பில் மற்றும் சன்பேர்ட் போன்ற சக்திவாய்ந்த ஸ்பைவேர்களும் உள்ள நிலையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பெறும் செய்தியிலிருந்து அல்லது தவறவிட்ட அழைப்பிலிருந்து ஸ்பைவேர் மூலம் உங்கள் தொலைபேசி பாதிக்கப்படலாம். பெகசஸ் போன்ற ஸ்பைவேர் ஏற்கனவே கண்டறியப்பட்டிருக்கும் போது அதே தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த ஸ்பைவேர்கள் நீங்கள் எந்த தீர்வைப் பயன்படுத்தினாலும் உங்கள் சாதனத்துடன் இணைந்திருக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் எப்படி பெகசஸ் ஸ்பைவரிலிருந்து மொபைல் போனை பாதுகாப்பாக வைத்திருக்க பின்வரும் வழிமுறைகள் உதவுமா? என்பது பற்றி அறிந்து கொள்வோம்..
VPN யை பயன்படுத்தி பெகசஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியுமா?
உயர்தர லேப்டாப் மற்றும் பல்வேறு கம்பெனிகளில் அவர்களுடைய பாதுகாப்பிற்காக virtual private network எனப்படும் வி.பி என் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்தவிதமான டேட்டாக்களையும் யாரும் திருடமுடியாது என்ற எண்ணத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள பெகசஸ் உளவு செயலி இதனை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் தனது பணியினை மேற்கொள்கிறது. குறிப்பாக மொபைல் எண் தெரியாவிடிலும், புளூடூத் மூலம் நம்முடைய தொலைபேசியில் ஸ்பைவரை பெறலாம். இதற்கு தொலைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இல்லையென்றாலும் Base Transceiver Station மூலம் யாருடைய மொபைல் எண் தேவைப்படுகிறதோ? அதனை எளிதாகப் பெற முடியும்.
ஆன்டிவைரஸ்( Antivirus) பெகசஸ் செயலில் இருந்து மொபைல் போனை பாதுகாக்குமா?
மொபைல் போன்ற தொழில்நுட்பச் சாதனைங்களை adware, malware போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வைரஸ் தடுப்பு பயன்பாடுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஆனால் நம்முடைய தொழில்நுட்ப சாதனங்களை பெகசஸ் செயலியால் உளவு பார்க்கத்தொடங்கும் பொழுது எந்த வித ஆன்டிவைரசுகளையும் பயன்படுத்தினாலும் பெரிதும் உதவாது. முன்னதாக உங்களது மொபைலில் பெகசஸ் ஸ்பைவரை அடையாளம் காண முடியாது. ஆனால் ஆன்டி வைரஸ் போன்றவற்றை உபயோகிக்கும் பொழுது பாதுகாப்பாக உணராலாம் என்றாலும், பெகசஸ் போன்ற அச்சுறுத்தல்கள் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தொலைபேசியில் செயல்படக்கூடும்.
factory reset செய்தால் பெகசஸ் உளவு செயலியில் இருந்து ஸ்மாட்போனை பாதுகாக்க முடியுமா?
உங்களது மொபைல் போன்கள் பெகசஸ் செயலியால் உளவுப்பார்ப்பதை நீங்கள் உணர்ந்து, இதனை நீக்குவதற்கு factory reset செய்ய முடிவு செய்தாலும் இதில் எவ்வித பலனும் இல்லை. ஒருவேளை நீங்கள் factory reset செய்து மொபைல் போனினை உபயோகித்தாலும் chip-level தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் பெகசசுக்கு இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
மொபைல் போனை சுவிட் ஆப் செய்தால் பெகசஸ் கண்காணிப்பினை தவிர்க்க முடியுமா?
பெகாசஸ் உங்களைக் கண்காணிப்பதைத் தவிர்க்க உங்கள் தொலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்தாலும் அதில் எந்தப் பலனும் இருக்காது. மொபைல் சுவிட் ஆப் செய்யபபட்டிருக்கும் போது கேமராவினைப்பயன்படுத்தி ஆடியோவினைப் பதிவு செய்யும் திறன் பெகசசுக்கு உண்டு. இருப்பினும் மொபைல் போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது எந்த டேட்டாக்களையும் ரிலே செய்ய முடியாது.
மொபைல் போனில் புதிய password கொடுத்து லாக் செய்யலாமா?
பெகசஸ் கண்காணிப்பில் உள்ள மொபைல் போனில் புதிய கடவுச்சொல், Face unlock, pattern lock போன்ற பல்வேறு முறைகளைப்பயன்படுத்தி மாற்றினாலும், பெகசஸ் ஸ்பைவர் அதன் வேலையினை தொடர்ந்து மேற்கொள்ளும்.
I cloud மற்றும் google கணக்கில் கடவுச்சொற்களை மாற்றலாமா?
நம்முடைய மொபைல் போன்ற தொழில்நுட்ப சாதனத்தில் பெகசஸ் ஸ்பைவரினால் கண்காணிக்கப்படும் பொழுது, I cloud மற்றும் google கணக்கினை மாற்றினால் சரியாகிவிடும் என்று அனைவரும் நினைக்கக்கூடும். ஆனால் பெகசஸினால் உளவுப்பார்க்கப்படும் பொழுது அதே , I cloud மற்றும் google கணக்கினை நாம் பயன்படுத்தும் பொழுது ஹேக்கர்கள் புதிய கடவுச்சொல் விபரங்களை எளிதில் பெற முடியும்.
பெகசஸ் கண்காணிப்பில் உள்ள போனில் புதிய சிம் கார்டினை மாற்றினால் பாதுகாக்க முடியுமா?
பெகசஸ் உளவு செயலியால், மொபைல் போன் பாதிக்கப்பட்ட நிலையில், புதிய சிம் கார்டினைப்பயன்படுத்துவது எந்த வகையிலும் உதவாது. ஏனெனில் புதிய சிம் கார்டிலிருந்து ஸ்பைவேர் டேட்டாவினைப்பிரித்தெடுக்க தொடங்கும்
இதுப்போன்று வழக்கமான நம்முடைய மொபைல் போன்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும் எந்தவித தொழில்நுட்பங்களும் பெகசஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியாதப்படி உள்ளது. எனவே உங்கள் தொலைபேசியிலிருந்து பெகாசஸை அகற்ற ஒரே வழி தொலைபேசி, மெமரி கார்டு மற்றும் சிம் கார்டை முற்றிலுமாக அழிக்க வேண்டும். இதோடு வேறு தொலைபேசி எண்ணுடன் புதிய தொலைபேசி மற்றும் புதிய சிம் கார்டைப் பெற்று, உங்கள் கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றலாம்.