GSLV-F10 Failure: தொழில்நுட்ப கோளாறு: இலக்கை எட்டாத ஜி.எஸ்.எல்.வி. எப்-10!
GSLV-F10 Failure: ராக்கெட் ஏவப்படுவதற்காக 26 மணி நேரம் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. கவுண்டவுன் முடிந்து இன்று காலை 5.43 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமனா இஸ்ரோ, பேரிடர், புயல் உருவாவது பற்றிய தகவல்களை தெரிவித்து எச்சரிக்க கூடிய பூமியை கண்காணிக்கும் ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி, இன்று காலை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவியது.
இந்நிலையில், விண்வெளியில் ஏவப்பட்ட ராக்கெட்டில் தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டுள்ளதால் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட் ஏவப்பட்டு மூன்றாவது நிலையின்போது கோளாறு ஏற்பட்டுள்ளதால், செயற்கை கோள் இலக்கை எட்டவில்லை. முதல் இரண்டு நிலைகளை கடந்த நிலையில், மூன்றாவது நிலையில் கிரயோஜெனிக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கெட்டை முழுமையாக செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
GSLV-F10 launch took place today at 0543 Hrs IST as scheduled. Performance of first and second stages was normal. However, Cryogenic Upper Stage ignition did not happen due to technical anomaly. The mission couldn't be accomplished as intended.
— ISRO (@isro) August 12, 2021
52 m tall GSLV-F10 carrying EOS-03 at the launch pad in Sriharikota.
— ISRO (@isro) August 11, 2021
Live telecast of launch begins at 05:10 am IST on Aug 12, 2021 https://t.co/DhZQpV6cqL https://t.co/7izTpcuX4zhttps://t.co/zugXQAGoNqhttps://t.co/3RQQqrtfyC#GSLVF10 #EOS03 #ISRO pic.twitter.com/x9tWSqdvqP
முன்னதாக, 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 செயற்கைகோள் ராக்கெட்டில் ஏவி விண்வெளியில் ஏவப்படுவதற்கு 26 மணி நேரம் கவுண்டவுன் தொடங்கப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பு, வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்பு, கவுண்டவுன் முடிந்து இன்று காலை 5.43 மணி அளவில் ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக ராக்கெட் இலக்கை எட்ட முடியாமல் ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
Petrol-Diesel Price, 12 August: போகாதே... போகாதே... அதே விலையில் நின்று விளையாடும் பெட்ரோல்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

