உங்க ஃபோனில் ஸ்டோரேஜ் பிரச்னையா? சின்ன டிப்ஸ்தான்.. இதைப்பண்ணுங்க போதும்!!
ஸ்டோரேஜ் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சில வழிகள் இருக்கு..
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மாட்ஃபோன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் சந்தையின் போட்டியை உணர்ந்து அதற்கேற்றவாறு மக்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகளுடன் கூடிய ஃபோன்களை அறிமுகம் செய்கின்றனர். அனைவருமே விரும்புவது பட்ஜெட் விலையில் அதிக ஸ்டோரேஜ் புதிய திறன்களுடன் இருக்கும் ஃபோன்களைதான். சரி, புது ஃபோன் வாங்கியாச்சு. அதன் பயன்படுத்தும்போது, ஸ்டோரேஜ் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சில வழிகள் இருக்கு. உங்ககிட்ட இருக்கும் போட்டோக்களையும் டெலீட் செய்ய முடியாது. ஆனால் உங்களுக்கு ஸ்பேஸ் வேண்டும். இண்டர்நெட் வேகமும் அதிகமாக இருக்க வேண்டும் இல்லையா? அதற்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு.
அதென்ன கேட்சி மெமரி (Cache memory):
பலருக்கும் எதாவது சந்தேகம் என்றாலோ, ஏன், எனக்கு ஏன் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது என்பதற்குக்கூட கூகுளிடம்தான் பதில் கேட்கின்றனர். எந்த விசயமாக இருந்தாலும், நாம் கூகுளிடம்தான் பதிலை நாடுகிறோம். அப்படியிருக்க, நாம் இணையத்தில் தேடும் தகவல்கள், வலைதளங்களின் முகவரி ஆகியவைகள் ஸ்மார்ட்ஃபோனில் பதிவாகும். அதுவே கேட்சி (Cache) என்றழைக்கப்படுகிறது. இது ஃபோனில் நீங்கள் பயன்படுத்தும் வலைதளங்களங்களின் தகவல்களை தற்காலிக தகவல் ஃபைலாக சேமிக்கும். இதனாலும் உங்கள் ஸ்டோரேஸ் நிரம்பும்.
கேட்சி ஃபைல் ஏன் சேமிக்கபப்டுகிறது என்றால், நீங்கள் முதல் முறையாக ஒரு வலைதளத்திற்கு செல்லும்போது அது லோடு ஆக சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவே நீங்கள் அதே வலைத்தளத்தை அடுத்தமுறை பயன்படுத்தும்போது, லோடு ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் என்பது கடந்த முறையை விட குறைவானதுதான். இதுதான் கேட்சி ஃபைலின் வேலை. ஆனால் இண்டர்நெட் வேகம் அதிகமாக இருந்தால் முதல் முறை என்றாலும் வலைதளம் லோடு ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மிகக் குறைவுதான் என்பது அனைவரும் அறிந்ததே.
கேட்சி ஃபைல் அழிப்பதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, நீங்கள் உங்கள் பிரவுசரில் பயன்படுத்திய அனைத்து தகவல்களும் ஸ்டோரேஜில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும். கேட்சி ஃபைல் என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. நீங்கள் உங்களுக்கு ஸ்டோரேஜ் முக்கியம் என்றால் கேட்சி ஃபைலை அழித்துவிட்டால் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
கேட்சி எப்படி டெலீட் செய்வது?
ஸ்மார்ட்ஃபோனில் செட்டிங்ஸ் ஆப்சனுக்குள் ஸ்டோரேஜை க்ளிக் செய்யவும். அதில் மேனேஜ் ஸ்டோரேஸ் மற்றும் கேட்சி என்று இருக்கும். அதில் கேட்சியைத் தேர்வு செய்து க்ளியர் கொடுத்தால் மொத்தமாக டெலீட் ஆகிவிடும்.
முன்பிருந்த ஓ.எஸ்.-ல் ஸ்டோரேஸ் என்ற ஆப்சனின் கீழ் எல்லா ஆப்களுக்கும் மொத்தமாக கேட்சி க்ளியர் செய்துவிடலாம். ஆனால் புதிய ஓ.எஸ்.-ல் ஒவ்வொரு ஆப்களுக்கும் தனித்தனியாக க்ளிக் செய்து, அதன் ஸ்டோரேஜ் பிரிவிற்கு சென்று கேட்சியை டெலீட் செய்ய வேண்டும்.
நீங்கள் கேட்சி டெலீட் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது: ஆப் இன்ஃபோவில் க்ளியர் டேட்டா என்ற ஆப்சன் இருக்கும். அதை மட்டும் க்ளிக் செய்துவிடாதீர்கள். ஆப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்துவிடும்.