Galaxy S22 Launch: நாளை லைவ் ஸ்ட்ரீமில் அன்பேக் நிகழ்வு…என்னென்ன எதிர்பார்க்கலாம்? லைவ் ஸ்ட்ரீம் பார்ப்பது எப்படி?
சாம்சங் தனது இணையதளத்தில் அன்பேக் லைவ் ஸ்ட்ரீமை வெளியிடுவதாகக் கூறுகிறது. பிப்ரவரி 9 நிகழ்வுக்கு முன் YouTube லைவின் லிங்க் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி அன்பேக் செய்யும் நிகழ்வு நாளை லைவ் ஸ்ட்ரீமாக நடக்கவிருக்கிறது. இதன்மூலம், இந்த ஆண்டின் முதல் பெரிய சாம்சங் அன்பேக் நிகழ்வாக இது நிகழப்போகிறது என்று டெக் பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சாம்சங் நிறுவனம் இந்த நிகழ்வின் போது என்னென்ன புதிய டிவைஸ்களை அறிவிக்கப்போகிறது என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இதுவரை இல்லை, ஆனால் இந்த நிகழ்வின் போது Samsung Galaxy S22 மற்றும் Galaxy S22 Ultra ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது என்பது மட்டும் இப்போதுவரை கணிக்கப்பட்டுள்ளது. Samsung Galaxy Unpacked 2022 வெளியீட்டு நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்குத் தொடங்கும். நிகழ்வில், சாம்சங் அதன் மூன்று பிரீமியம் ஸ்மார்ட்போன்களை அறிவிக்கும், அவை Samsung Galaxy S22, S22 Plus மற்றும் டாப்-எண்ட் Samsung Galaxy S22 Ultra என்று தெரிகிறது. இந்த நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே இது குறித்த பல விஷயங்கள் லீக்காகி வைரலாகி வருகின்றன. அவை எந்த அளவுக்கு உண்மை என்ற விஷயமெல்லாம் அறிந்துகொள்ள நாளை வரை காத்திருக்க வேண்டும். அறிமுகத்திற்கு முன்னதாக, Samsung Galaxy S22 என்னென்ன ஸ்பெசிஃபிகேஷன்களுடன் வருகிறது என்று பார்க்கலாம்.
எஸ் 22 அல்ட்ரா மாடல், 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன், நீங்கள் Samsung Galaxy Note போன்ற வடிவமைப்பு மற்றும் S Pen ஸ்டைலஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் நீங்கள் Samsung Exynos 2200 மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 ஆகிய இரண்டு சிப்செட் ஆப்ஷன்களை பெறுவீர்கள். இதில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 108MP வைட் ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மற்றும் நல்ல ஆப்டிகல் ஜூம் தரத்துடன் வரும் என்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என்றும் தெரிகிறது.
இந்தத் Series இன் பேசிக் மாடல், 6.1-இன்ச் FHD+ AMOLED 2x டிஸ்ப்ளே, 3,700mAh பேட்டரி, 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் ஐப் கொண்டிருக்கலாம். Samsung Exynos 2200 அல்லது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த மொபைலில், 50MP வைட்-ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இது 10MP முன் கேமராவையும் கொண்டிருக்கும்.
To know more, register now https://t.co/in8TvqcT3S and join us for an epic unveiling on February 9, 2022 at 8:30 PM. *T&C apply. https://t.co/hcR2XCIKah
— Samsung India (@SamsungIndia) February 4, 2022
லீக்கான தகவல்களின் படி, Samsung Galaxy S22 பேசிக் மாடல் தோராயமாக ரூ. 59,700 ஆரம்ப விலையில் கிடைக்கலாம். இது 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. Galaxy S22 Plus விலை தோராயமாக ரூ. 74,600 ஆகும். கடைசியாக, Samsung Galaxy S22 Ultra விலை தோராயமாக ரூ. 89,500 த்தில் தொடங்கலாம். இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 12 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் தனது இணையதளத்தில் அன்பேக் லைவ் ஸ்ட்ரீமை வெளியிடுவதாகக் கூறுகிறது. பிப்ரவரி 9 நிகழ்வுக்கு முன் YouTube லைவின் லிங்க் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் அதன் நியூஸ்ரூம் மற்றும் அதன் யூடியூப் சேனலில் தொடங்கிப் பல இடங்களில் ஆன்லைன் நிகழ்ச்சியை லைவ் ஸ்ட்ரீம் செய்யும். புதன்கிழமை நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சற்று முன் குறிப்பிட்ட YouTube இணைப்பை வழங்கும். சாம்சங்கின் லைவ் ஸ்ட்ரீமை வழங்கும் மற்ற இடங்கள் பின்வருமாறு: சாம்சங்கின் முகநூல் பக்கம், சாம்சங்கின் Reddit பக்கம், அமேசான் லைவ், சாம்சங்கின் TikTok கணக்கு, சாம்சங் மொபைல் ட்விட்டர் கணக்கு, இந்த அணைத்து இடங்களிலும் நீங்கள் இந்த Samsung Galaxy Unpacked 2022 நிகழ்வை நேரலையில் பார்க்கலாம்.