மேலும் அறிய

Redmi 10 Prime | பட்ஜெட்டுக்குள் ஒரு பக்கா போன்.. விற்பனைக்கு வந்த ரெட்மி 10 ப்ரைம்!

கடந்த வாரம் இந்தியாவில் நடந்த வெளியீட்டு நிகழ்வின் போது, ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் மற்றும் முழு அம்சங்களையும் சியோமி அறிவித்தது.

இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் முதன்முறையாக இன்று பிற்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வந்தது. பலரும் ஆர்வத்துடன் ஆர்டர் செய்துள்ளனர். ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் + ஸ்டோரேஜ் மாடல்களில் வருகிறது. அது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஆகும். இது 6.5 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 50 எம்பி மெயின் ரியர் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.12,499 க்கும் மற்றும் டாப்-எண்ட் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ.14,499 க்கும் வாங்க கிடைக்கும். வெள்ளை, கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் இந்த போன் அமேசான், Mi.com மற்றும் Mi ஹோம் ஸ்டோர்ஸ் வழியாக இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்தது.

Redmi 10 Prime | பட்ஜெட்டுக்குள் ஒரு பக்கா போன்.. விற்பனைக்கு  வந்த ரெட்மி 10 ப்ரைம்!

சலுகைகளை பொறுத்தவரை, HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI விருப்பங்களை பயன்படுத்தினால் ரூ.750 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ரெட்மி 10 ப்ரைம் தற்போது சியோமியின் ரெட்மி 10 சீரிஸில் விலை மலிவான போன் ஆகும். குறிப்பாக அதன் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 என்கிற விலையில் வாங்க கிடைப்பதை நீங்கள் கருத்தில் கொள்ளும்போது, அதன் விலையை அதன் அம்சங்களுடன் ஒப்பிடும் போது சற்றே குறைவாக இருக்கலாம். ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் சமீப காலமாக பல விலை உயர்வுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனுடன் ஒப்பிடும் போது ரெட்மி 10 ப்ரைம் ஆனது ரூ .10,000 முதல் ரூ .13,000 வரை என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் ஒரு நல்ல ஆப்ஷன் என்றே கூறலாம். ரெட்மி 10 ப்ரைம் மதிப்பாய்வ

வு செய்தபோது, இது ஒரு பெரிய பேட்டரி, தேவையான அளவு செயல்திறன் மற்றும் தரமான டிஸ்பிளே என ஒரு பட்ஜெட் ரெட்மி ஸ்மார்ட்போனில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அனைத்துமே உள்ளன.

Redmi 10 Prime | பட்ஜெட்டுக்குள் ஒரு பக்கா போன்.. விற்பனைக்கு  வந்த ரெட்மி 10 ப்ரைம்!

ஆனால் மொபைல் கேமரா திறன்களை எதிர்நோக்கும் ஒருவர் இதை விரும்பாமல் போகலாம். இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ரெட்மி நோட் 10 மாடலின் விலை மற்றும் செயத்திறனுடன் ஒப்பிடும் போது இது மதிப்பு மிக்க ஸ்மார்ட்போனாக மற்றும் சற்றே வித்தியாசமான போனாக தெரிகிறது. பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா 8 எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது. இது Full HD (1080p) வீடியோ பதிவு வசதியுடன் வருகிறது. 120fps பிரேம் வீதத்தில் HD (720p) ஸ்லோ மோஷன் விடியோவும் எடுக்கலாம். முன்பக்கத்தில் இது 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

6.5 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, 20: 9 என்கிற அளவிலான ஸ்க்ரீன் ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மேலும் 45 ஹெர்ட்ஸ், 60 ஹெர்ட்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதங்களுக்கு இடையில் மாறும் திறனுடன் டிஸ்பிளே தந்திருக்கிறார்கள்.

6000mAh பேட்டரி மூலம் சார்ஜ் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. ஆனால் பாக்ஸில் 22.5W சார்ஜர் உடன் அனுப்பப்படும், அதிலும் சுவாரசியமாக இது 9W வரை ரிவர்ஸ் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. நல்ல செயல்திறனுக்காக, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G88 SoC, ARM மாலி-G52 MC2 GPU, 6GB வரை LPDDR4x RAM, 2 ஜிபி வரை ரேம் விரிவாக்கத்திற்கான செயல்பாடு போன்றவைகளை கொண்டுள்ளது.

டூயல் சிம் ஆதரவு கொண்ட ரெட்மி 10 ப்ரைம் மாடல் ஆனது 128 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12.5, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) ஸ்டோரேஜை விரிவாக்கும் விருப்பம் போன்ற மற்ற சில பொதுவான அம்சங்களையும், கனெக்டிவிட்டியில் 4G எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் v5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம்ரேடியோ, யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஜாக் போன்றவைகளை கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தென் தமிழகத்தின் வளர்ச்சியில் இது திருப்புமுனை" எதை சொல்கிறார் பிரதமர் மோடி?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
புதிய புற்றுநோய் மையங்கள்.. மத்திய அரசு வழங்கிய ஒப்புதல்.. எங்கெல்லாம் வருகிறது?
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி... விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம் !
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடப் பாவிங்களா.?! ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை - எங்கு நடந்த கொடுமை தெரியுமா.?
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
அடுத்த டார்கெட் அஜித் தான்...லோகேஷ் கனகராஜ் கொடுத்த செம அப்டேட்
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Budget SUV Cars: 20 லட்சம்தான் பட்ஜெட்! மஹிந்திரா, டாடா, மாருதியின் சொகுசான SUV கார்கள் இதுதான் மக்களே!
Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
சென்னையில ஜூலை 28 திங்கட்கிழமை எங்கெங்க பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.?
Embed widget