Realme GT 2 Pro: ஏப்ரல் 7-ல்அறிமுகம் ஆகிறது ரியல்மீ ஸ்மாட்ஃபோன் புதிய மாடல்! சிறப்பம்சங்கள் என்ன?
ஏப்ரல் 7 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது ரியல்மீ ஸ்மாட்ஃபோன் புதிய மாடல்!
இந்தியாவில் புதிய ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அறிமுகம் ஆகிறது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இருக்கும், என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் AMOLED 10-bit ‘Super Reality' டிஸ்பிளேவுடன் வெளிவரும். 1,440x3,216 பிக்சல், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 எம்.பி Sony IMX766 சென்சார் +50எம்.பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. இந்த ஸ்மாட்ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆகிய இண்டர்னல் மெமரி வசதியைக் கொண்டுள்ளது.
Get ready to welcome the #realmeGT2Pro!
— realme (@realmeIndia) March 24, 2022
The World's First Sustainably Designed Smartphone is aesthetically pleasing, environmentally friendly, and durable.#GreaterThanYouSee.
Launching at 12:30 PM, 7th April on our official channels.
Know more: https://t.co/pgZ3465uDC pic.twitter.com/IqY4pm6tsm
ரியல்மி ஜிடி 2 ப்ரோ 12ஜிபி + 256ஜிபி ரேம் CNY 4,299 (தோராயமாக ரூ. 51,500) மற்றும் 12ஜ்பி ரேம் மற்றும் 512ஜிபி ரேம் டாப்-ஆஃப்-லைன் மாறுபாடு CNY 4,799 (தோராயமாக ரூ. 57,500) ஆகிய வேரியட்களிலும் விலையில் வெளிவர இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்