google chips | ஜப்பானில் விற்பனைக்கு வந்த கூகுளின் உருளைக்கிழங்கு சிப்ஸ் - காரணம் இதுதானாம்!
அதெல்லாம் சரி ! அது ஏன் உருளைக்கிழங்கு சிப்ஸை வைத்து ஸ்மார்ஃபோனை விளம்பரப்படுத்த வேண்டும் என கேள்வி எழலாம். காரணம் இருக்கு!.
தேடுபொறி, மென்பொருள் உற்பத்தி, மொபைல் போன்ற பிற எலெக்ட்ரிக் சாதனங்கள் உற்பத்தி போன்றவற்றில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பது Google .தொழில்நுட்ப நிறுவனமாக அறியப்படும் கூகுளானது ஜப்பானில் தனது சொந்த தயாரிப்பில் உருளைக்கிழங்கு சிப்ஸை விற்பனை செய்துவரும் சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேளை ஒன்பிளஸ் நிறுவனம் ஆடை விற்பனையில் இறங்கியது போல , கூகுளும் உருளைக்கிழங்கு சிப்ஸ் விற்பனையை சைடு பிஸினஸாக தொடங்கிவிட்டதோ என பார்த்தால் , அது தனது அடுத்த மொபைல் சீரிஸிற்கான புரோமோஷன் வேலை என தெரியவந்துள்ளது. கூகுள் நிறுவனம் pixel என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்தாக அறிமுகப்படுத்தவுள்ள pixel 6 series ஸ்மார்ட்போன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த புதிய யுக்தியை கூகுள் கையாண்டுள்ளது.
அதெல்லாம் சரி ! அது ஏன் உருளைக்கிழங்கு சிப்ஸை வைத்து ஸ்மார்ஃபோனை விளம்பரப்படுத்த வேண்டும் என கேள்வி எழலாம். காரணம் இருக்கு!. google தனது அடுத்த மொபைல் பதிப்பான pixel 6 series முழுவதையும் “டென்சர் சிப்ஸ் (tensor chips )” என்னும் புதிய புராஸசரால் உருவாக்கியுள்ளது. இந்த புராஸசர் கூகுளின் சொந்த படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே உருளைக்கிழங்கு சிப்ஸை கையில் எடுத்துள்ளது அந்நிறுவனம். ”கூகுள் ஒரிஷினல் சிப்ஸ்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த உருளை சிப்ஸ் மொத்தமாக 10,000 யூனிட் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சிப்ஸ் விற்பனை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி , இணையதளம் போன்றவற்றிலும் கூகுள் ஒரிஜினல் சிப்ஸின் விளம்பர படங்களும் ஜப்பான் நாட்டில் ஒளிப்பரப்பாகின்றன.
அதில் “கூகுள் சிப்ஸ் இறுதியாக வந்துவிட்டது , ஃபிரஷாக உருவாக்கப்பட்ட கூகுளி்ன் ஒரிஜினல் சிப்ஸ் முதல் 10,000 பேருக்கு டெலிவரி செய்யப்படும்” என பஞ்ச் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் இறுதியில் டென்சர் சிப்ஸ் புராசஸர் குறித்த விவரங்களும் இடம்பெற தவறவில்லை. என்னதான் கூகுள் பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் சில நாடுகளில் வெற்றிகரமாக விற்பனையாவதில்லை. அதனை முறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சில கலைநுட்பமான விளம்பர யுக்திகளை கையில் எடுத்துள்ளது. சிப்ஸ் வெவ்வேறு நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இது பிக்சல் 6 சீரிஸ் மொபைல் போன்களின் நிறத்தை குறிக்கலாம் என கருதப்படுகிறது. ஜப்பானில் வெளியான விளம்பரம் ஒன்று , உலகம் முழுவதும் கவனத்தை பெறுகிறது என்றால் , நினைத்தமாதிரியான விளம்பரத்தை கூகுள் அடைந்துவிட்டது. அதே போல பிக்சல் 6 சீரிஸ் மொபைல்போன்களும் பயனாளர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.