உங்க மொபைல் password மறந்துடுச்சா? கவலையை விடுங்க.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
மொபைல் முற்றிலுமாக ஆஃப் ஆனதும் Power மற்றும் Volume Down இரண்டையும் அதிர்வு வரும் வரையில் ஒன்றாக அழுத்தி பிடியுங்கள்.
நாம் சில சமயங்களில் மிகவும் பழைய ஸ்மார்ட்போனை பயன்படுத்த நினைக்கலாம். அந்த ஸ்மார்ட்போனின் கடவுச்சொல் அல்லது பேட்டர்னை நீங்கள் மறந்திருக்கலாம். இந்த மாதிரியான சமயங்களில் நாம் மொபைல் ரிப்பேர் கடைகளை அனுகுவோம். சில சமயங்கள் அது நமது தனியுரிமைக்கு சிக்கலை ஏற்படுத்திவிடலாம் . ஆனால் கவலையை விடுங்கள் கீழ்கண்ட முறைகளை பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய் மற்றும் ஐபோனினை கடவுச்சொல் இல்லாமல் பாதுகாப்பாக திறகக முடியும்.
Hard Reset மூலம் மொபைலை திறப்பது எப்படி ?
power பட்டனை அழுத்தி பிடித்துக்கொள்ளுங்கள் . பின்னர் “power off” என்னு வசதியை கிளிக் செய்துக்கொள்ளுங்கள் .
மொபைல் முற்றிலுமாக ஆஃப் ஆனதும் Power மற்றும் Volume Down இரண்டையும் அதிர்வு வரும் வரையில் ஒன்றாக அழுத்தி பிடியுங்கள்.
அதன் பின்னர் மொபைலானது recovery modeக்கு சென்றுவிடும் , அதன் பிறகு தோன்றும் திரையில் மொபைல் பேட்டர்ன் கேட்கும் . “Forgot password” என்பதை கொடுங்கள் .அதன் பிறகு “You will LOSE everything” என்னும் வசதி வரும் “Ok” என கொடுத்துக்கொள்ளுங்கள் .தற்போது உங்கள் மொபைல் மீண்டும் reboot செய்யப்பட்டுவிடும். இப்போது மொபைலை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Find My Device மூலம் மொபைலை திறப்பது எப்படி ?
முதலில் கூகுளின் உதவியுடன் Find My Device என்னும் தளத்திற்கு செல்லுங்கள். அதில் உங்களது டிவைஸை தேர்வு செய்து “Erase device என்பதை கிளிக் செய்யுங்கள். தற்போது மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மொபைல் மீண்டும் restrat ஆக துவங்கும்.
iTunes ஐ பயன்படுத்தி ஐபோனை அன்லாக் செய்வது எப்படி ?
உங்கள் ஐபோனை அன்லாக் செய்து மீட்டமைக்க விரும்பினால், அவ்வாறு செய்ய உங்களிடம் Mac அல்லது PC இருக்க வேண்டும். உங்களிடம் அது கிடைத்ததும், ஐடியூன்ஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தி உங்கள் ஐபோனைத் திறக்கலாம்.
உங்களது ஐபோனை Turn off செய்துக்கொள்ளவும். உங்கள் ஐபோனை உடனடியாக கணினியுடன் இணைக்கும் போது, உங்கள் ஐபோனில் பக்கவாட்டு பொத்தானைப் பிடித்து உங்கள் ஐபோனை மீட்டெடுப்பு பயன்முறையில் வைக்கவும் (பொத்தானை விட வேண்டாம்). உங்கள் ஐபோனில் மீட்பு பயன்முறைத் திரையைப் பார்க்கும் வரை பொத்தானைப் பிடித்துக் கொண்டே இருங்கள், பின்னர் விடுங்கள் (கடவுக்குறியீடு திரையைப் பார்த்தால், உங்கள் ஐபோனை அணைத்துவிட்டு மீண்டும் செயல்முறையைத் தொடங்க வேண்டும்)
உங்கள் ஐபோனை ஃபைண்டரில் அல்லது அது இணைக்கப்பட்டுள்ள கணினியில் ஐடியூன்ஸ் இல் கண்டறியவும்
Restore அல்லது Update என்னும் இரண்டு வசதியில் Restore என்பதை தேர்வு செய்துகொள்ளவும்.
தற்போது உங்கள் ஐபோனில் restore process துவங்கிவிடும் . அது முடியும் வரை காத்திருக்கவும்.
பின்னர் உங்கள் ஐபோனை கணினியில் இருந்து விலக்கி , மீண்டும் ஐபோனின் இயக்கத்தை துவக்கலாம்.