புலி உருவம் பொறித்த Oppo Reno 7 5G ! புத்தாண்டு எடிஷனை கொண்டுவந்த Oppo ..!
சீன மக்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு மிருகங்களை குறிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் வர இருக்கும் 2022 ஆம் ஆண்டானது புலியை குறிக்கும் என தெரிவிக்கின்றனர்.
சீன தொழில்நுட்ப நிறுவனமான OPPO தற்போது தனது புதிய மாடல் மொபைல்போன்களை சந்தைப்படுத்தியுள்ளது.oppo Reno 7 5G என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் போனானது 2022 புத்தாண்டு எடிசனாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த oppo Reno 7 5G மொபைல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக o2ppo Reno 7 series மொபைல்போன்களை கடந்த நவம்பர் மாதம் சந்தைப்படுத்தியது ஒப்போ நிறுவனம். ஆனால் சீனாவில் அறிமுகமான நிலையில் மற்ற நாடுகளில் சந்தையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது கலக்கலாக அறிமுகமாகியுள்ள oppo Reno 7 5G விரையில் மற்ற நாட்டுகளிலும் அறிமுகமாக வேண்டும் என்பதுதான் பல மொபைல் பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
Oppo Reno 7 5G new year edition is coming. #Oppo #OPPOReno7 pic.twitter.com/lfdBt3JWgA
— Raghvendra Singh jadon (@rsjadon01) December 24, 2021
சீன மக்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு புத்தாண்டும் ஒரு மிருகங்களை குறிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் வர இருக்கும் 2022 ஆம் ஆண்டானது புலியை குறிக்கும் என தெரிவிக்கின்றனர். அதனால் தற்போது அறிமுகமாகியுள்ள oppo Reno 7 5G மொபைலின் பின்புறம் புலி பொறிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. Oppo Reno 7 5G புத்தாண்டு எடிசன் என்பதால் இது நவம்பர் மாதம் அறிமுகமான ஒப்போ சீரிஸின் வதிகளையே பெரும்பாலும் கொண்டுள்ளது. 6.43 full-HD திரையுடன் 1,080x2,400 pixel ரெசலியூசனுடன் AMOLED display வசதியை கொண்டுள்ளது. மேலும் 20:9 aspect ratio வசதியை கொண்டு திரை கொடுக்கப்படுள்ளது. 90Hz refresh rate வசதியுடன் Qualcomm Snapdragon 778G SoC புராஸசரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Oppo Reno 7 New year edition first impression.#oppo #reno7pro #Android12 #5G #news #trendcyborg pic.twitter.com/BBjkJKcFTx
— Trend cyborg (@CyborgTrend) December 24, 2021
Oppo Reno 7 5G புத்தாண்டு பதிப்பு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸுடன் மூன்று பின்புற கேமரா வசதியை கொண்டுள்ளது. முன்பக்கம் இது 32 மெகாபிக்சல் சோனி IMX709 சென்சார் வசதியை கொண்டுள்ளது.மேலும் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் v5.2, GPS/ A-GPS, NFC, மற்றும் USB Type-C வசதிகளை கொண்டுள்ளது. 60W ஃபிளாஷ் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விலை :
8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் விலை CNY 2,699( இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 31,800) என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 35,400). அடுத்ததாக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி 256 சேமிப்பு திறன் கொண்ட மொபைலின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 38,900 ஆகும். நிறத்தை பொறுத்த வரையில் வெல்வெட் ரெட் நிறத்தில் பலரை கவரும் விதமாக அறிமுகமாகியுள்ளது.