Nothing Mobile | சத்தமே இல்லாமல் மொபைல் தயாரிப்பில் களமிறங்கும் 'Nothing' நிறுவனம்!இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..
இரண்டே மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யூனியன் இயர் 1 பட்டுகள் விற்பனையாக தொடங்கிவிட்டன. அதுவரையில் இயர்பட் தயாரிப்பிலிருந்த பல முன்னணி நிறுவனங்கள் நத்திங்க் பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கிவிட்டன.
லண்டனை சேர்ந்த பிரபல நிறுவனமான NOTHING தற்போது மொபைல் சந்தையில் கால் பதிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல ஒன் பிளஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் கார்ல் சாய்யின் புதிய நிறுவனம்தான் நத்திங். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமான NOTHING கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிறுவனமாகும். மக்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் இருக்கும் தடையை நீக்குவதாக அமையும் எங்கள் தயாரிப்புகள் என உரைக்கின்றனர் நத்திங் நிறுவனம். முதன் முதலாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி தனது முதல் படைப்பான இயர் ஒன் என்ற பெயரிலான இயர்பட்டை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் விற்பனை சக்கப்போடு போட ஆரமித்துவிட்டது. இரண்டே மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் யூனியன் இயர் ஒன் பட்டுகள் விற்பனையாக தொடங்கிவிட்டன. அதுவரையில் இயர்பட் தயாரிப்பிலிருந்த பல முன்னணி நிறுவனங்கள் நத்திங்க் பக்கம் கவனத்தை திருப்ப தொடங்கிவிட்டன.
We’re excited to be working with @Qualcomm to power our growing tech ecosystem.
— Nothing (@nothing) October 13, 2021
Over the last year, we’ve seen that there’s a space for a challenger in the tech world. This partnership will play a big role in achieving our vision.
Here’s to the future.
Today is your day. There's more ear (1) stock and it's ready for you.https://t.co/pLWW07l8G7
— Nothing (@nothing) October 12, 2021
🇬🇧 11 a.m. BST
🇪🇺 12 p.m. CEST
🇺🇸🇨🇦 12 p.m. EST
🇦🇺 8 p.m. AEST
More Nothing ear (1) units are made available every Tuesday at the same times. pic.twitter.com/lu1Rw0ja8q
இந்நிலையில் நத்திங் நிறுவனம் மொபைல் தயாரிப்பிலும் கால் பதிக்கவுள்ளதாக சில நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக நத்திங் நிறுவனத்தின் நிறுவனர் கார்ல் பெய் (Carl Pei
) எசென்ஷியல் நிறுவன காப்புரிமைகளை தங்கள் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே போலகுவால்காம் நிறுவன சிப்செட்களை தனது புதிய சாதனங்களில் பயன்படுத்த இருப்பதாக நத்திங் அறிவித்தது. இதற்காக 50 மில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொபைல் போன் குறித்த செய்திகள் பரவ தொடங்கியதும் நெட்டிசன் ஒருவர் கார்ல் பெய்யிடன் “உங்கள் அடுத்த தயாரிப்பு குறித்து ஏதேனும் ஹிண்ட் கொடுங்களேன்” என கேட்டார். அதற்கு அவர் தனது நிறுவனத்தின் பெயரை இணைத்து , “அது நத்திங்காக இருக்கும் “ என இரு பொருள்படும்படியாக ரிட்வீட் செய்துள்ளார்.
It will be something https://t.co/9ub7zt8bHE
— Carl Pei (@getpeid) October 14, 2021
தற்போது உருவாகி வரும் நத்திங் ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளார்களாம் . முன்னதாக இயர் ஒன் என்ற பெயரில் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம் . மொபைல் ஃபோன மொபைல் ஒன் என அறிமுகப்படுத்த கூட வாய்ப்பிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்மார்ட்ஃபோன் குறித்த அறிவிப்பை நத்திங் வெளியிடும் என தெரிகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் பவர் ஒன் என்னும் ஸ்மார்ட்போனையும் நத்திங் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.