Whatsapp: வரும் அக்டோபர் முதல் இந்த ஐஃபோன்களில் வாட்ஸ் அப் இயங்காதா? உடனே அப்டேட் பண்ணுங்க..
வரும் அக்டோபர் முதல் சில ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி சரியாக செயல்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் தளம் அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு சில அப்டேட்களை அளித்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களுக்கு ஏற்ப தன்னுடைய வசதியை மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் வாட்ஸ் அப் தொடர்பாக பீட்டாஇன்ஃபோ தளம் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஐபோன் வாடிக்கையாளர்கள் சிலருக்கு இது பெரும் அடியாக விழுந்துள்ளது. அந்த தகவலின்படி இனிமேல் வாட்ஸ் அப் செயலி ஐஓஎஸ்10, ஐஓஎஸ் 11 ஓஎஸ்களில் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப் செயலி இந்த ஓஎஸ்களில் சரியாக செயல்படாது என்று தகவல் தெரிவித்துள்ளது.
இதற்காக ஐஓஎஸ் 10 மற்றும் 11 வைத்துள்ளவர்கள் தங்களுடைய ஒஎஸை 12க்கு மேல் அப்டேட் செய்ய வேண்டும். அதாவது ஐபோன் 5எஸ், ஐபோன் 6 மற்றும் 6 எஸ் ஆகிய போன்கள் ஐஓஎஸ் 10 மற்றும் 11ல் செயல்பட்டு வருகின்றன. அந்த ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி அக்டோபர் முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 முதல் வாட்ஸ் அப் செயலி சரியாக செயல்படும் என்று இந்த தளம் தெரிவித்துள்ளது. ஆகவே ஐபோனில் 10 மற்றும் 11 ஐஓஎஸ் வைத்திருப்பவர்கள் விரைவாக தங்களுடைய ஓஎஸை அப்டேட் செய்து கொள்வது முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது.
முன்னதாக WABetaInfo வெளியிட்டிருக்கும் ஸ்க்ரீன்ஷாட் படி குழுவில் இருந்து வெளியேற முடிவு செய்துவிட்டால் “only you and group admins will be notified that you left the group” என்ற வாசகத்துடன் கூடிய பாப் அப் தோன்றும். அதில் எக்ஸிட் க்ரூப் என்பதை கொடுத்தவுடன், யாருக்கும் தெரியாமல் அந்த குழுவில் இருந்து வெளியேறிவிடலாம். இந்த வசதியானது இப்போதைக்கு வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பிற்கு உருவாக்கும் பணிகள் நடைபெற்றாலும், விரைவில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்க்கு கொண்டுவரப்படும். குழுவில் தற்போது அதிகபட்சமாக 256 பேரை மட்டுமே சேர்க்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அதை 512 ஆக அதிகரிக்கும் வசதியை உருவாக்கிக்கொண்டிருப்பதாக சமீபத்தில் தான் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்