Oppo F29 Pro 5G: கேமராவில் இத்தனை சிறப்புகளா? ஓப்போ F29 Pro 5G மொபைல் விற்பனை எப்போது?
Oppo F29 Series India Launch: இந்தியாவில் வெளியாகியுள்ள ஓப்போ F29 சீரிஸ் சிறப்புகள், விலை பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.

ஓப்போ நிறுவனத்தின் ‘Oppo F29 Series’ ஸ்மாட்ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ’Oppo F29' , ’Oppo F29 ப்ரோ’ ஆகிய இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது.
ஓப்போ F29 மாடல்:
ஸ்மாட்ஃபோன் சந்தையில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களுடன் மாடல்கள் வெளியாகி வருகிறது. பிரபல ஸ்மாட்ஃபோன் நிறுவனம் ஓப்போ ‘Oppo F29 5G, Oppo F29 Pro 5G’ இரண்டு மாடல்களை வெளியிட இருக்கிறது. ஆண்ட்ராய்ட் 15, அதிக நேர பேட்டரி வசதி ஆகியவற்றுடன் வெளியாகியுள்ளது. இந்த மாடல் வெளியீடு, புதிய மாடலில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
The wait is over! Pre-order the all-new #OPPOF29Series5G – starting at ₹23,999! Featuring the stunning OPPO Glow design and a tough 360° Armor Body, this smartphone is made to shine and endure.#TheDurableChampion
— OPPO India (@OPPOIndia) March 20, 2025
Pre-order now: https://t.co/I4uZbocao7 pic.twitter.com/oVea3r3ocV
Oppo F29 Vs Oppo F29 Pro: சிறப்புகள் என்ன?
ஓப்போ F29 5G சீரிஸ் மாடல், இந்தியாவில் மார்ச் 20-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது.
புதிய வடிவமைப்பு, 360 டிகிரி ஆர்மர் Case, MIL-STD-810H-2022 சான்றிதழ், IP66, IP68 மற்றும் IP69 ஆகிய மதிப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. 6.7-inch AMOLED டிஸ்ப்ளே 120Hz ரெஃப்ரெஷ் ரேட். 3000 nits peak ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
Oppo F29 மாடல் 2.5GHz octa கோர் ப்ராசசர், F29 Pro 5G Qualcomm Snapdragon 6 Gen 3 chipset ப்ராசசர் உடன் வரலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. Oppo F29 மாடல் 256GB இன்டனர்ல் மெமரி, ப்ரோ வர்சன் 128GB உடன் கிடைக்குமாம். ஓப்போ F29 மூன்று கேமராவுடன் வருகிறது. தண்ணீருக்கு அடியில் புகைப்படம், வீடியோ எடுக்கும் அளவு வாட்டர் ரெசிஸ்டண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்-ஐ பொறுத்தவரை ப்ரோ மாடலில் 6,000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. 45W SuperVOOC உடன் வருவதால் அதிவிரைவாக சார்ஜ் ஆகிவிடும்.ஓப்போ F29 5G: கிளேசியர் ப்ளூ மற்றும் சாலிட் பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கும். ஓப்போ F29 ப்ரோ 5G மொபைல் கிரானைட் பிளாக் மற்றும் மார்பிள் வைட் வண்ணங்களில் கிடைக்கும். கேமரா வசதிகள் மேம்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
விலை விவரம்:
Oppo F29 5Gயின் 8GB + 128GB வேரியண்ட் ரூ.23,999-க்கும் 8GB + 256GB மாடல் ரூ.25,999க்கும் கிடைக்கிறது. Oppo F29 Pro 5G மாடல் 8GB + 128GB வேரியண்ட் ரூ.27,999 க்கு கிடைக்கிறது.
போலவே, Oppo F29 Pro 5G ரூ.29,999க்கு 8GB + 256GB மாடலும் ரூ. 31,999 க்கு 12GB + 256GB வேரியண்ட் ஸ்மாட்ஃபோன் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான், ஃபில்ப்கார்ட், ஓப்போவின் அதிராகப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் ஆகியவற்றில் வாங்கலாம்.
விற்பனை எப்போது?
Oppo F29 Pro 5G மற்றும் Oppo F29 மாடல் ஸ்மாட்ஃபோன்கள் மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும். 10 சதவீத பேங்க் தள்ளுபடி, உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.





















