வெளுத்து வாங்கப் போகும் அக்னி நட்சத்திர வெயில் எப்போது தொடங்கும் முதல் எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் தகவல் வரை இங்கே பார்க்கலாம்
கோடை வெயிலின் உச்சக்கட்டமான அக்னி நட்சத்திரம் மே 4 முதல் தொடங்குகிறது.
25 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 28 வரை வெப்பம் அதிகமாக இருக்கும்.
உள் மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருக்கும். பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
அக்னி நட்சத்திரம் காலத்தில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் வெப்பம் சற்று குறையலாம் என்று தெரிவித்துள்ளது
அக்னி நட்சத்திரம் காலத்தில் உடல் வெப்பத்தை குறைக்கும் உணவுகளை உண்ணுவது நல்லது. இளநீர், மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை பருகுங்கள்.
காட்டன் ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும். இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.