Malware | உஷார்! இந்த ஆப் உங்க போன்ல இருக்கா? உடனே தூக்கிடுங்க.. அச்சமூட்டும் புதிய வைரஸ்!
Vultur மால்வேர் செல்போனுக்குள் நுழைந்து பாதுகாப்பு அம்சங்களை திருடும். அதாவது பேங்கிங் செயலிகளில் பயன்படுத்தப்படும் யூசர் நேம், பாஸ்வேர்டுகளை திருடுவது, ஓடிபியை கையாள்வது போன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை திருடும்.
Two-factor authentication என்பது பல செயலிகளில் தற்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை ஆகும். பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகளில் மட்டுமல்லாது சில பேங்கிங் ஆப்களிலும் இது உள்ளது. குறிப்பிட்ட செயலியை பயன்படுத்துவது அந்த போனின் உரிமையாளர்தானா என்பதை உறுதிப்படுத்தவே இந்த Two-factor authentication.
இந்த முறையை கையாள சில ஆப்களும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அப்படியான ஒரு ஆப் தான் ‘2FA Authenticator'. பாதுகாப்பு அம்சமாக இருந்த செயலியே தற்போது பாதுகாப்பு இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போன்களை அச்சுறுத்தும், தகவல்களை திருடும் மால்வேர் 2FA Authenticatorக்குள் நுழைந்துள்ளது.
2FA Authenticator என்ற இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டு 15 நாளுக்குள் 10ஆயிரம் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னரே மால்வேர் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த செயலியை கூகுள் நீக்கியுள்ளது.
இந்த Vultur மால்வேர் செல்போனுக்குள் நுழைந்து பாதுகாப்பு அம்சங்களை திருடும். அதாவது பேங்கிங் செயலிகளில் பயன்படுத்தப்படும் யூசர் நேம், பாஸ்வேர்டுகளை திருடுவது, ஓடிபியை கையாள்வதுபோன்ற முக்கிய பாதுகாப்பு அம்சங்களை திருடும். கிட்டத்தட்ட 35 லட்சத்துக்கும் அதிகமான செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அனைத்தும் பாதுகாப்பு என்றெல்லாம் சொல்ல முடியாமல் பாதுகாப்பு அம்சங்களில் சொதப்புகிறது கூகுள். ஒவ்வொரு நொடியும் ரிவியூ செய்யப்பட்டு அனைத்து செயலிகளையும் கூகுள் கண்காணித்தாலும் கூகுளின் கண்ணில் மண்ணைத் தூவி மால்வேர்கள் நுழைந்துவிடுகின்றன. அதனை கண்டுபிடிப்பதற்குள் பல ஆயிரம் டவுன்லோடுகள் செய்யப்பட்டு விடுகின்றன. அதனால் மிக முக்கியமான தேவைக்கான முக்கிய செயலியை மட்டுமே நாம் பயன்படுத்துவது ஆகச் சிறந்தது.
ஏற்கெனவே ப்ளோபோட் மால்வேர் ஆண்ட்ராய்ட் பயனர்களை அச்சுறுத்தியது. `ஃப்ளூபோட்’ மால்வேர் உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் நுழைந்தால் உங்கள் கிரெடிட் கார்ட் விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள், எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள், பிரவுசர் தகவல்கள் முதலான பலவற்றையும் பார்க்க முடிவதோடு, அவற்றைக் கசிய வைக்கவும் முடியும். உங்கள் ஸ்க்ரீனில் திடீரென காட்டப்படும் செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் எனக் கூறும் லிங்க் எதையும் க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். செக்யூரிட்டி அப்டேட், புதிய ஆப்கள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்யப் பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியது இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்