Elon Musk: இந்த விஷயங்களை ட்விட்டரில் எலான் மஸ்க் மாற்றினால்... ஜாலிக்கு பஞ்சம் இருக்காது..!
ட்விட்டர் நிறுவனத்தை ஜாலியான தளமாக மாற்றுவதே அவருடைய ஆசை என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் பிரபல தொழிலதிபரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமமன எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வாங்கினார். அப்போது முதல் அவர் ட்விட்டர் தளத்தில் போடும் பதிவுகள் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றன. அத்துடன் அவர் ட்விட்டர் நிறுவனத்தை எடுத்த பிறகு சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில் அவர் கொண்டு வர உள்ள முக்கியமான மாற்றங்கள் என்னென்னவாக இருக்கலாம்?
எலான் மஸ்கின் முக்கியமான நோக்கம் ட்விட்டர் தளத்தை மிகவும் ஜாலியான தளமாக மாற்றுவதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்தவகையில் அவர் இந்த சில விஷயங்களை செய்வார் என்று ஒரு தொழில்நுட்ப தளம் சிலவற்றை வேடிக்கையாக கணித்துள்ளது. அதன்படி முதலில் அவர் ட்விட்டர் நிறுவனத்தை ஏற்ற பிறகு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரெம்ப் கணக்கை மீண்டும் செயல்பட செய்வார் என்று அந்த தளம் கணித்துள்ளது.
Let’s make Twitter maximum fun!
— Elon Musk (@elonmusk) April 28, 2022
இவை தவிர தன்னுடைய டெஸ்லா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைகள் முழுவதையும் ட்விட்டர் தளத்தில் அவர் மேற்கொள்ள வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று நக்கலாக தெரிவித்துள்ளது. அதேபோல் புதிதாக கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டரில் வரும் முட்டை படத்திற்கு பதிலாக எலான் மஸ்கின் படம் வரலாம் என்றும் அந்த தளம் கணித்துள்ளது.
மேலும் தற்போது ட்விட்டரில் உள்ள 280 வார்த்தைகள் என்ற உச்சவரம்பை அவர் 420 வரை உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது. ட்விட்டரின் தொழில்நுட்பம் இனிமேல் எலான் மஸ்கை ஃபாலோ செய்பவர்களுக்கு சாதகமாக இருக்குமாறு மாற்றியமைக்கப்படும் என்று அந்த தளம் காமெடியாக கணித்துள்ளது. தற்போது ட்விட்டரில் முடங்கி கிடக்கும் பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் செயல்பட வைக்க எலான் மஸ்க் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதில் அதிகமாக லைக், ஃபாலோ,கமெண்ட் செய்யப்படும் கணக்குகளின் பதிவுகளுக்கு டெஸ்லா கார்கள், விண்வெளி சுற்றுலா உள்ளிட்டவற்றை அவர் அறிவிப்பார் என்றும் கிண்டலாக தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்