Jio Launch 5G: இன்னும் 4 மாசம்தான்.. '5ஜி'யில் மாஸ் ப்ளான்போடும் முகேஷ் அம்பானி!
Jio Launch 5G: 2023ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5G அலைக்கற்றை தொடங்கப்பட்டு சேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
Jio Launch 5G: 2023ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சிறு நகரங்கள் தொடங்கி, கிராமங்கள் வரை உள்ள அனைவரையும் இணைக்கும் அளவிற்கு 5G அலைக்கற்றை சேவை வெற்றிகரமாக தொடங்கப்படும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக மெட்ரோ நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5G சேவை தீபாவளி முதல் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Jio to launch 5G by Diwali, aims to cover entire country by 2023, Mukesh Ambani tells shareholders
— ANI Digital (@ani_digital) August 29, 2022
Read @ANI Story | https://t.co/iyq4Sp7OaT#Jio5Gservices #Jio #datapoweredeconomy #RelianceIndustriesLimited #RelianceAGM2022 pic.twitter.com/iHdcwZ5O90
இதற்கு முன்னதாக, இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம், ஜூலை 26 தொடங்கி நடைபெற்றது. முதல் நாளில் நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், முதல் நாள் முடிவில் பரபரவென ஏலம் சென்றதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். இந்த ஏலத்தில் ரூ.88,078 கோடிக்கு விற்கப்பட்ட அலைக்கற்றைகளில் கிட்டத்தட்ட பாதியை வாங்கியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ. இது குறித்து குறிப்பிட்ட தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னா, அதானி குழுமம் 400 மெகா ஹெர்ட்ஸை வாங்கியுள்ளது. அதாவது விற்பனையான மொத்த அலைக்கற்றைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அனைத்தையும் தனதாக்கியுள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது "உலகின் மிக மேம்பட்ட 5G நெட்வொர்க்கை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கும், டிஜிட்டல் இணைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் இந்தியாவை உலகத்தின் தலைமையாக மாற்றுவதற்கும் ஜியோ தயாராகி வருகிறது. “700MHz, 800MHz, 1800MHz, 3300MHz மற்றும் 26GHz அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதன் மூலம் அனைத்து 22 வட்டங்களிலும் தலைமைத்துவ நிலையை ஒருங்கிணைக்கிறது. ஜியோவின் தனித்துவமான 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தடம், இந்தியா முழுவதும் உண்மையான 5G சேவைகளை வழங்கும் ஒரே ஆபரேட்டராக மாறும்’’ எனக் குறிப்பிட்டிருந்தது.
அதேபோல், அதானி குழுமம் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. ஆனால் இது பொது நெட்வொர்க்குகளுக்கு இல்லை. ஜியோ, 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் உட்பட பல அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது. 700 மெகா ஹெர்ட்ஸ் என்றாலே 6-10 கிமீ 5G சிக்னல் வரம்பை வழங்கக்கூடிய அளவாகும்.
அக்டோபர் மாதத்திற்குள் 5G சேவை தொடங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ள நிலையில் ஏலம் முடிந்த பிறகு, ஜியோவின் அறிவிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. முதல் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ.13,365 கோடியை அரசு பெறும். தொலைத்தொடர்பு அதிபரான சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல், 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் ரூ.43,084 கோடிக்கு வாங்கியுள்ளது.வோடபோன் ஐடியா லிமிடெட், 18,784 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.