RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
Reusable Launch Vehicle Pushpak: செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையிலான புஷ்பக ராக்கெட்டின் சோதனையானது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட்டின் 3வது மற்றும் கடைசி கட்ட சோதனையை இஸ்ரோ விண்வெளி நிலையம் வெற்றிகரமாக சோதனை செய்து அசத்தியுள்ளது.
புஷ்பக் ராக்கெட் :
இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மட்டுமன்றி அயல்நாடுகளின் செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது. இதனால், வருங்காலத்தில் கூடுதலாக பல செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா, தற்போது பயன்படுத்தி வரும் ராக்கெட்டுகளானது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் வகையில்தான் உள்ளது. இதனால், அடுத்த முறை, புதிய ராக்கெட் தயாரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் செலவினம் அதிகம் ஏற்படுகிறது.
இறுதி சோதனை வெற்றி:
இதை கருத்தில் கொண்டு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான , புஷ்பக் என்ற பெயரில் ராக்கெட்டை தயாரிக்கும் திட்டத்தில் இஸ்ரோ இறங்கியது. ஏற்கனவே, 2 முறை வெற்றிகரமாக , புஷ்பக் ராக்கெட்டின் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் 3வது முறையாக, அதாவது கடைசி சோதனையை வெற்றிகரமாக சோதனையை இஸ்ரோ நடத்தி முடித்து சாதனை படைத்துள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பக் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, தரையிறங்கிய வீடியோ காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
RLV-LEX3 Video pic.twitter.com/MkYLP4asYY
— ISRO (@isro) June 23, 2024