jiophone | சொன்னபடி இருக்கா jio phone next? எங்கு ,எப்படி வாங்கலாம்?
முன்னதாக 4 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மொபைலின் விலை இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அதை ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம்தான்.
இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள மொபைல்போன் jio phone next. குறைந்த விலையிலான 4ஜி தொழில்நுட்ப மொபைல்களை ஜியோ உற்பத்தி செய்ய போகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதலே , ஹைப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ இந்த புதிய வகை மொபைல் போன்களை உருவாக்கியுள்ளது ஜியோ நிறுவனம். வெளியாவதற்கு முன்னதாக 4 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மொபைலின் விலை இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இதன் விலை 6,499 ரூபாயாகும். ஆனால் 1,999 ரூபாய் என்ற முன்தொகையை செலுத்தி 24 மாதங்கள் தவணை முறையில் மீதமுள்ள தொகையை செலுத்தும் வசதி உள்ளது. இதற்காக Always-on plan, large plan , Xl plan, XXl plan என்ற மாதாந்திர விவரக்கட்டணங்கள் குறித்த வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
For everyone who asked what’s Next?
— Google India (@GoogleIndia) October 29, 2021
We worked with @reliancejio to create a device that is affordable, helpful & brings a unique Android experience to millions of Indians entering the smartphone world.
Presenting #JioPhoneNext, created with Google ➡️ https://t.co/lLh5rjdBef pic.twitter.com/huNWNFsiDI
விலை குறைவாக உள்ள ஸ்மார்ட்போன்களின் வசதிகளை ஒப்பிடும் பொழுது jio phone next அவையுடன் வெகுவான ஒப்புமைகளை கொண்டுள்ளது. ஆனாலும் கூகுள் நிறுவனத்தின் சில வசதிகள் இன்பில்டாகவே ஜியோ மொபைலில் கிடைக்கின்றன. குறிப்பாக Android 11 Go பதிப்பு இயங்குதளத்தை கொண்டிருப்பதால் இது கூடுதல் பிளஸாக பார்க்கப்படுகிறது.அதே போல Google Assistant குரல் கட்டளை வசதிகளை கொண்டுள்ளது. மொழிப்பெயர்ப்பு செய்யவும் அதனை சத்தமாக வாசிக்கவும் இதில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு , மலையாளம் ,இந்தி உள்ளிட்ட 10 மொழிகளை jio phone next ஆதரிக்கிறது.
Celebrate the joy of the festive season in your preferred language with smart language translate, on JioPhone Next.
— Reliance Jio (@reliancejio) November 5, 2021
Know more: https://t.co/zLFpgiyTxR#JioPhoneNext #Diwali #HappyNewYear #FestiveSeason #SmartLanguageTranslate #JioDigitalLife pic.twitter.com/3HrK8jH6MX
ஸ்னாப்சாட்டின் augmented reality லென்சுடன் கூடிய கேமராவை கொண்டுள்ளது. இரவிலும் புகைப்படங்களை எடுக்கலாம் என கூறப்படுகிறது. அதே போல இதற்காக உருவாக்கப்பட்ட சில பிரத்யேக செயலி மூலம் , அருகில் உள்ள மற்ற மொபைல் போன்களுக்கான வீடியோ, புகைப்படம் உள்ளிட்டற்றை அனுப்பலாம். இதில் ப்ளூடூத் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது இதற்கு இணைய வசதி தேவையில்லை.கூகுளின் பிக்சல் மொபைலில் உள்ளது போலவே "Feature Drops" மற்றும் "Security Updates" போன்ற வசதிகள் மூலகமாகவே ஜியோ மொபைல் போனிலும் எதிர்கால புதுப்பித்தல் வசதிகளை பெறலாம்.
ஜியோ மொபைல் கழற்றி மாட்டும் வகையிலான பேட்டரியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு முறை பேட்டரி பழுதானால் வேறு பேட்டரி மாற்றிக்கொள்ளலாம்.JioPhone Next இல் ஜியோ சிம்கார்டை தவிர மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம்மை பயன்படுத்தினால் அதன் 2 ஜி சேவையை பெற முடியாது. அடிப்படை மாடலாக வெளியாகியிருக்கும் JioPhone Next இன் விலை அடுத்தடுத்து கணிசமாக உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த மொபைல்போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது இதனை https://www.jio.com/next என்ற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.