Instagram Update: இன்ஸ்டாகிராமில் வந்திருக்கும் 7 புது அப்டேட்ஸ்.. இனிமே இதை செஞ்சு அசத்துங்க..
Instagram Update: இன்ஸ்டாகிராமில் புதிய மெசேஜ் அப்டேட்கள்.. என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்!
உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இதில் ரீல்ஸ், ஸ்டோரிஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. அதனாலேயே பலரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. இன்ஸ்டாகிராம் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை புதிய அப்டேட்களை வழங்கு குஷிப்படுத்துகிறது. தற்போது இன்ஸ்டாகிராம் புதிதாக 7 மெசேஜிங் அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்:
Play, pause, and re-play:
இன்ஸ்டாகிராம் பயனர்கள் 30 நொடிகள் பிரிவீயூ உள்ள பாடல்களை நண்பர்களுடன் சாட் மெசேஜில் ஷேர் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக்கின் உதவியுடன் இயங்குகிறது. விரைவில் ஸ்பாட்டிஃபையிலும் இந்த அம்சம் கிடைக்கும்.
Get a DM while browsing? 📩
— Instagram (@instagram) March 31, 2022
You can now reply to a new message without going to your inbox. pic.twitter.com/DzpaO5AQsd
Reply while you browse:
இன்ஸ்டாகிராம் ஹோம் ஃபீடில் பார்த்து கொண்டிருக்கும்போதே, மெசேஜ் வந்தால் தனியாக இன்பாக்ஸ் சென்று ரிப்ளை செய்வது பழைய நடைமுறை. ஆனால், இப்போது, போஸ்ட் பார்த்துகொண்டே ரிப்ளை செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாம் மெசேஜ்ஜிற்கு ரிப்ளை செய்யும்போது பேக்ரவுண்ட் பிளர் ஆக தெரியும்.
Quickly send to friends:
நான் போஸ்ட்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதை நண்பர்களுடம் ஷேர் செய்ய விரும்புவோம். அதை சுலபமாக்க, பதிவை எளிதாக ஷேர் செய்ய முடியும் வகையில் புதிய அப்டேட். ஷேர் பட்டனை அழுத்தி பிடித்தால் அதில் நாம் ஷேர் செய்ய வேண்டிய நபர்களின் ப்ரொஃபைல்கள் காட்டும். அவர்களுக்கு போஸ்ட்களைப் பகிரலாம்.
Fast and easy. 👍
— Instagram (@instagram) March 31, 2022
Tap and hold the share button so you can send posts to your closest friends. pic.twitter.com/UYJpW2KGZB
See Who's Online:
இன்ஸ்டாகிராமில் நாம் நண்பர்களுடன் சேட் செய்வதற்கு ஏற்றவகையில் யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Send Messages Quietly:
நாம் மெசேஜ் செய்பவர்களை தொந்தரவு செய்யாமல் சத்தமில்லாமல் மெசேஜ் அனுப்பும் அம்சமும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. @Silent என்ற வார்த்தையை மெசேஜ்ஜிற்கு முன் பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டிஃபிகேஷன் இல்லாமல் மெசேஜ் அனுப்பப்படும்.
Late night thoughts? 👀🧠
— Instagram (@instagram) March 31, 2022
Send messages without notifying friends late at night or when they’re busy by adding “@silent” in your message. pic.twitter.com/z8wA3sl1kn
Keep it on the lo-fi:
இன்ஸ்டாகிராம் நிறுவனம் லோஃபி eன்ற புதிய சேட் தீம் அறிமுகம் செய்துள்ளது.
Create a poll with your squad:
இன்ஸ்டாகிராமில் குரூப் சேட்டில் வாக்கெடுப்பு வைக்கும் அம்சமும் இடம்பெறவுள்ளது.
தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் இருக்கும் சில அப்டேட்கள் உங்கள் இன்ஸ்டாகிராமிலும் பெற, இன்ஸ்டாகிராம் அப்-ஐ அப்டேட் செய்து பாருங்கள்.
https://about.instagram.com/blog/announcements/introducing-new-dm-features
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்