Jio Esim | ஐபோனில் ஜியோ இ-சிம்மினை ஆக்டிவேட் செய்வது எப்படி ?
இ- சிம் வசதிகள் ஐபோன், கூகுள் மொபைல்ஸ், சாம்சங் மொபைல்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்திய தொலைத்தொடர்பு சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது ஜியோ. அனைவருக்குமான இணைய சேவை கிடைக்க ஜியோவே மிக முக்கிய காரணம் எனலாம். அந்த வகையில் பயனாளர்களுக்காக ஏராளமான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் இ-சிம். ஜியோவின் இ- சிம் வசதிகள் ஐபோன், கூகுள் மொபைல்ஸ், சாம்சங் மொபைல்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோனில் எவ்வாறு இ-சிம்மினை சிம்பிளாக ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து தற்போது காணலாம்.
ஜியோவின் இ-சிம்மை ஐபோன் எக்ஸ்.ஆர் (iPhone XR) , ஐபோன் எக்ஸ்.எஸ்( iPhone XS), ஐபோன் எக்ஸ்.எஸ் மேக்ஸ் (iPhone XS Max), ஐபோன் 11( iPhone 11), ஐபோன் 11 புரோ (iPhone 11 Pro), ஐபோன் 11 புரோ மேக்ஸ் (iPhone 11 Pro Max), ஐபோன் எஸ்.இ 2020 மாடல், ( iPhone SE (2020)), ஐபோன் 12 மினி (iPhone 12 mini), ஐபோன் 12 (iPhone 12), ஐபோன் 12 புரோ (iPhone 12 Pro) , ஐபோன் 12 புரோ மேக்ஸ் ( iPhone 12 Pro Max) வரையிலான மொபைல்போன்களில் மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும். குறிப்பாக iOS 12.1 அல்லது அதற்கு மேல் இயங்குதள அப்டேட்டை உங்கள் ஐபோன் பெற்றிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இ-சிம் ஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்:
Settings----> General----> About என்ற வசதிக்குள் சென்று EID number மற்றும் IMEI number ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு EID எண் மற்றும் IMEI எண் ஆகியவற்றை டைப் செய்து, உங்கள் மொபைல் எண்ணிலிருந்து 199 என்ற சேவை எண்ணிற்கு ”GETESIM ”என எஸ்எம்எஸ் அனுப்பவும்.
பிறகு 19 இலக்க இ-சிம் எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தியை (Sms) நீங்கள் பெறுவீர்கள். அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து , சிம் ஆக்டிவேஷனை உறுதிப்படுத்த ‘1’ என்ற நம்பரை 188 என்ற சேவை எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
பிறகு நீங்கள் தானியங்கி அழைப்பு ஒன்றை பெறுவீர்கள், அதனை ஏற்று ,குறுஞ்செய்தி வாயிலாக வந்த 19 இலக்க இ-சிம் எண்ணிணை பதிவிட வேண்டும். பிறகு இ-சிம் ஆக்டிவேட் செய்யப்பட்டதற்காக குறுஞ்செய்தியை பெறுவீர்கள்.
இப்போது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சாதாரண சிம் சேவையை இழந்து, இ - சிம் ஆக்டிவாகிவிடும். பிறகு கேட்கப்படும் சில அடிப்படை தகவல்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து உங்கள் இ-சிம்மினை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம்.