மேலும் அறிய

Nano Banana AI Saree: இணையத்தை கலக்கும் கூகுளின் ஜெமினி நேனோ பனானா ஏஐ புடவை ஸ்டைல்; எச்சரிக்கும் காவல்துறை

கூகுள் ஜெமினி ஏஐ-யின் நேனோ பனானா புடவை ஸ்டைல் தற்போது இணையத்தை கலக்கி வரும் அதே வேளையில், இளம் தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை வலியுறுத்துகிறது.

இணையதளத்தில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தற்போது ‘பனானா ஏஐ சேலை‘ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த போக்கைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

ட்ரெண்டாகிவரும் ‘பனானா ஏஐ சேலை‘

இன்ஸ்டாகிராமில், ‘பனானா ஏஐ சேலை‘ என்ற புதிய ட்ரெண்ட்  தற்போது வேகமாக பரவி, இளம் தலைமுறையை கவர்ந்து வருகிறது. இது, பயனாளர்களின் செல்ஃபிக்களை, வியக்கும் வகையிலான 90-களின் பாலிட் பாணி உருவப்படமாக மாற்றித் தருகிறது.

இந்த போக்கு, கூகுள் ஜெமினியின் நானோ பனானா பட எடிட்டிங் கருவி மற்றும் நானோ பனானா ஏஐ 3டி  உருவப்படப் போக்கை பயன்படுத்துகிறது. இந்த எடிட்டுகள் மூலம், காற்றில் மிதக்கும் ஷிஃபான் புடவைகள், ரெட்ரோ அமைப்பு, கருப்பு பார்ட்டி உடை தோற்றங்கள், மலர்களுடன் கூடிய பிரின்டட் உடைகள், வியத்தகு நிழல்களுடன், அற்புதமான பின்னணிகளுடன் கூடிய நிழற்படங்கள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறது.

நேனோ பனானா ஏஐ தொழில்நுட்பம், பயனாளர்களின் புகைப்படங்களை நுண்ணிய டீட்டெய்ல்களுடன் 3டி உருவப்படங்களாக மாற்ற உதவுகிறது. பொம்மை போன்ற அடித்தளங்கள், வண்ணமயமான காட்சி அமைப்புகள் மூலம் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்படும் நியில், புதிய புடனை மாறுபாடு, சினிமா, விண்டேஜ் பாணி புகைப்படங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

இந்த புதிய நேனோ பனானா ஸ்டைல் வைரலாகியுள்ள நிலையில், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இணையத்தில் பிரபலமான தலைப்புகளை கண்டு ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ‘நேனோ பனானா‘ மோகத்தின் வலையில் விழுவது ஆபத்தானது என்று கூறியுள்ள காவல்துறை, பயனாளர்கள் தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டால், மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

ஒரே கிளிக்கில், பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் குற்றவாளிகளின் கைகளில் போய் சேரக்கூடும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், ஜெமினி தளத்தை பிரதிபலிக்கும் போலி வலைதளங்கள் அல்லது அதிகாரப்பூர்வமற்ற செயலிகளில் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்படி போலி வலைதளங்களில் உங்கள் தரவு பதிவேற்றப்பட்டால், அதை மீட்பது மிகவும் கடினமானதாகிவிடும் என்றும், ‘உங்கள் தரவு, உங்கள் பணம் - உங்கள் பொறுப்பு‘ என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அதிகாரப்பூர்வ கூகுள் ஜெமினி செயலியை திறந்தோ அல்லது ஜெமினி ஏஐ ஸ்டுடியோவை அணுகுமாறும், உங்கள் கூகுள் கண்க்கில் உள்நுழைந்து, ‘படத் திருத்தத்தை முயற்சிக்கவும்‘ என்பதை கிளிக் செய்து, பனானா ஐகானைத் தேடி, தெளிவான தனிப் படத்தை பதிவேற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ செயலியில் இந்த படிகளை பின்பற்றுவதன் மூலம், பயனாளர்கள் தனிப்பட்ட தரவு அல்லது பாதுகாப்பை சமரசம் செய்யாமல், பாதுகாப்பாக இந்த போக்கை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget