மேலும் அறிய

amazon smart fridge | ஸ்மார்ட் ஃபிரிட்ஜை உருவாக்கும் முயற்சியில் அமேசான்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்த திட்டத்திற்காக இதுவரையில் கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டதாக தெரிகிறது

ஆண்டுக்கு ஆண்டு புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது பிரபல அமேசான் நிறுவனம் . அந்த வகையில் இந்த ஆண்டு புதிய சாதங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியது. அமேசான் அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்துமே வீட்டில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டது. சமீபத்தில் கூட  ஆஸ்ட்ரோ வீட்டு பயன்பாட்டிற்கு ஏதுவான  ரோபோவை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் புதிய வகை ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் ஒன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அமேசான். இந்த ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டியின் மூலம் , உள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் அளவை வெளியே இருக்கும் திரை மூலம் அறிந்துக்கொள்ள முடியுமாம்.  பொதுவாகவே சிலர் ஃபிரிட்ஜின் வைக்கப்படும் பொருட்கள் தீர்ந்துவிட்டது  என்பதை கடைசி நிமிடத்தில்தான் அறிந்துக்கொள்வோம்.  ஆனால் அமேசான் அறிமுகப்படுத்தவுள்ள  நம்மில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் குறைவாக உள்ள பொருட்களின் அலர்ட்டுகளை குரல் கட்டளையாகவே  பயனாளர்களுக்கு கொடுத்துவிடுமாம்.  அதே போல அமேசான் ஸ்டோரில் தீர்ந்த பொருளை ஆடர் செய்துக்கொள்ளவும் வழிவகை செய்யுமாம்.  

ஸ்மார்ட் ஃபிரிஜை அலாக்ஸா குரல் கட்டளை மூலமாகவும் கட்டுப்படுத்தும் வசதிகள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது .  எனவே குரல் கட்டளை மூலமாகவே தீர்ந்து போன பழங்களையோ, அல்லது காய்கறிகளையோ ஆடர் செய்துக்கொள்ளலாம் . அதே போல சில உணவுகளை எப்படி செய்வது என்ற பரிந்துரைகளை வழங்குமாம். பொதுவாக அமேசான் ஃபிரிட்ஜ்  போன்ற வீட்டு  உபயோக பொருட்களை தயாரிப்பதில்லை . எனவே பிரபல நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.


amazon smart fridge | ஸ்மார்ட் ஃபிரிட்ஜை உருவாக்கும் முயற்சியில் அமேசான்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

முன்னதாக இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்சாதன பெட்டிகளை அமேசான் தங்களது ஆளில்லாத கடைகளில்  பயன்படுத்தி வருகிறது. அதை நம் வீட்டு சமையல் அறைக்கும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அமேசானின் நோக்கமாம். ஆளில்லாத கடைகளில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகளில் ஜஸ்ட் வாக் அவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தள்ளுவண்டிகளில் எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் விலை கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான்  ஸ்மார்ட் ஃபிரிட்ஜுகள் உருவாக்கப்படும் என தெரிகிறது. தற்போது  முயற்சியில் இருந்து வரும் ஸ்மார்ட் ஃபிரிட்ஜை அடுத்த  இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தைப்படுத்த வேண்டும் என அமேசான் திட்டமிட்டுள்ளது.அமேசான் ஃப்ரெஷ் மற்றும் லேப் 126 ஆகிய இரண்டும் இணைந்து ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். 


amazon smart fridge | ஸ்மார்ட் ஃபிரிட்ஜை உருவாக்கும் முயற்சியில் அமேசான்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இந்த திட்டத்திற்காக இதுவரையில் கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டதாக தெரிகிறது. ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் தயாரிப்பது இது முதல் முறையல்ல , சாம்சங் நிறுவனம் இதே காண்செப்டுடன் கூடிய ஃபிரிட்ஜ் ஒன்றை தயாரித்தது. அதில் காலியாகவுள்ள பொருட்களை திரையின் வாயிலாகவே அறிந்துக்கொள்ளலாம். ஆனால் அமேசான் உருவாக்கும் இந்த புதிய ஸ்மார்ட் ஃபிரிஜ்ட்  அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டத்து என்கின்றனர். இந்த ஃபிரிட்ஜின் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தால் , அது சந்தைக்கு வரமாலும் கூட போகலாம். அப்படி சந்தைப்படுத்தப்பட்டால் அதன் விலை நிச்சயம் உச்சத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

தலைப்பு செய்திகள்

விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
விண்வெளியில் இந்தியா செய்த வரலாற்றுச் சாதனை! உலக நாடுகள் வியப்பு! இஸ்ரோ செய்த மாஸ் சம்பவம்!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
BSNL free data : வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
வெறும் 1 ரூபாய்க்கு 24 நாட்களுக்கு இலவச டேட்டா.! அன்லிமிடேட் கால்- BSNL அசத்தல் அறிவிப்பு
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget