Apple Launch Event Update: உங்க பட்ஜெட் என்ன? ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1, 80,000 வரை.. ஐபோன் 13 மாடல்களும் விலையும்!
கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ், ஐபோன் 13 மாடல்கள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் ஈவண்ட் நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்பட்டி நேற்று இரவு 10.30 மணிக்கு இந்த அறிமுக விழா நடந்தது. கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸ் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.
ஐபோன் 13 மாடல்களை பொருத்தவரை ஐபோன் 13, ஐபோன்13 புரோ, ஐபோன் 13 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 13 மினி என நான்கு விதங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.69,999 ல் இருந்து தொடங்குகிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் மாடல்களை ஆப்பிள் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். ஐபோன் 13 அறிமுகம் ஆனாலும் ஐபோன் 12 மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 மினி:
ஐபோன் 13 மினி 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.69,999க்கு விற்பனையாகவுள்ளது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ. 79,999க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.99,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த மாடல் பிங்க், ப்ளூ, மிட்நைட், ஸ்டார்லைட், சிவப்பு உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் செப்டம்பர் 17ம் தேதி முதல் சந்தையில் கிடைக்கும்.
ஐபோன் 13:
ஐபோன் 13 பொருத்தவரை 128ஜிபி மாடல் ரூ.79,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 256ஜிபி மாடல் ரூ.89,999 க்கும், 512 ஜிபி மாடல் ரூ.1,09,900க்கும் விற்பனையாகவுள்ளது. இந்த மாடலும் ஐபோன் 13 மினி மாடலைப் போலவே 4 வண்ணங்களில் கிடைக்கும். செப்டம்பர் 17ல் முன்பதிவு செய்யப்படும் இந்த மாடல் செப்டம்பர் 24ல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன்13 ப்ரோ:
ஐபோன் 13 ப்ரோ மாடலின் 128 ஜிபி ரூ.1,19,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி மாடல் ரூ.1,29,900க்கும், 512 ஜிபி ரூ.1,49,900க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச அம்சங்களை கொண்ட 1 டிபி மாடலானது ரூ.1,69,900க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலும் செப்டம்பர் 24க்கு பிறகு சந்தையில் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்:
வெளியான ஐபோன் மாடல்களில் ஐபோன் ப்ரோ 13 ப்ரோ மேக்ஸ் அதிக உச்சபட்ச அம்சங்களை கொண்டுள்ளது. இதன் 128ஜிபி ரூ.1.29,900க்கும், 256 ஜிபி ரூ,1,39,900க்கும், 512 ஜிபி ரூ.1,59,900க்கும், 1 டிபி மாடல் ரூ.1,79,900க்கும் விற்பனையாகவுள்ளது. 4 வெவ்வேறு வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ந்த மாடலும் செப்டம்பர் 24க்கு பிறகு சந்தையில் கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளியான அனைத்து மாடல்களிலுமே கேமரா, லுக், பேட்டரி என அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள். அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் ஆப்ஷன், சினிமாட்டிக் மோட், அல்ட்ரா வைட் உள்ளிட்ட பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
போன்மாடல் மட்டுமின்றி புதிய சீரிஸ் வாட்ச் சீரிஸ் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக வாட்சின் திரை அளவு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் அளவை ஒப்பிடுகையில் 16 சதவிகிதம் அதிக பிக்சலேட் திறனை Apple வாட்ச் 7 சீரிஸ் பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. முன்பு பெரிய திரை கொண்ட Apple ஸ்மார்ட் வாட்ச்சின் பிக்சல் அளவு 368 ×448 ஆக இருந்தது. தற்போது 396 × 484 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.இதன் மூலமாக துல்லியமாக தகவல்களை பெற முடியும் என நம்பப்படுகிறது. இது தவிர முகப்பு திரை டிசைன்கள் சிலவற்றையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.
அவற்றை பிரபல நைக்(Nike) மற்றும் ஹெர்ம்ஸ் ( Hermes) நிறுவனங்கள் தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வகை டிசைன்களுக்கு மாடுலார் மேக்ஸ்(Modular Max), கான்டினூம் மற்றும் அட்லஸ்( Continuum and Atlas,) , வேர்ல்ட் டைமர் ( World Timer) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அதிவேக புராசஸர் மற்றும் தட்டையான விளிம்புகளுடன் கூடிய கேஸ் வடிவமைப்பையும் Apple வாட்ச் சீரிஸ் 7 பெற்றிருக்குமாம்.
ஆப்பிள் வாட்ச் மட்டுமின்றி ஆப்பிள் ஐபேட் மாடலும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐபேட் மூன்றாம் தரப்பு கீபோர்டுகள் மற்றும் இது முதல் தலைமுறை ஆப்பிள் பென்சில் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் பேஸ் மாடலான 64 ஜிபி விலை 329 டாலர்கள் (சுமார் 24 ஆயிரம்) என துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Get the news from the #AppleEvent here. Meet iPhone 13 Pro, iPhone 13, Apple Watch Series 7, Apple Fitness+, iPad, and iPad mini. Swipe to explore
— Apple (@Apple) September 14, 2021